உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாடு, பன்றிகளுக்கு மீது கார்பன் வரி: காற்று மாசை குறைக்க டென்மார்க் முடிவு

மாடு, பன்றிகளுக்கு மீது கார்பன் வரி: காற்று மாசை குறைக்க டென்மார்க் முடிவு

கோபனேஹன்: காற்று மாசை குறைக்கும் வகையில், உலகிலேயே முதல் முறையாக, ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; இது, 2030ல் அமலுக்கு வருகிறது.பருவநிலை மாறுபாடு என்பது உலகளாவிய மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், காற்று மாசுபடுவதாகும். கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் உமிழப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அது, பருவநிலை மாறுபாடு பிரச்னையாக வளர்கிறது.

முக்கிய பிரச்னை

கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு தொடர்பாகவே உலகெங்கும் பெரிதாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், மீத்தேன் உள்ளிட்ட கிரீன் ஹவுஸ் வாயுக்கள் எனப்படும் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் வாயுக்களும் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளன.அமெரிக்க தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் கணிப்பின்படி, கடந்த, 20 ஆண்டுகளில் மீத்தேன், வெப்பத்தை ஈர்ப்பது, 87 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், மீத்தேன் தற்போது முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க், 1990ல் இருந்த அளவில் இருந்து, கிரீன் ஹவுஸ் வாயு வெளியீட்டை, 2030க்குள், 70 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, கால்நடை வளர்ப்பை முக்கியத் தொழிலாக கொண்ட அந்த நாட்டில், பசு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளுக்கு, 2030ம் ஆண்டில் இருந்து, கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.உலகிலேயே கால்நடைகளுக்கு வரி விதிக்கும் நடைமுறையை முதலில் அறிமுகம் செய்யும் நாடாக டென்மார்க் விளங்க உள்ளது. நியூயார்க்கில், இதுபோன்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்தால், அந்த சட்டம் அங்கு திரும்பப் பெறப்பட்டது. குப்பை கொட்டும் இடங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு முறைகள், மீத்தேன் உருவாவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

சாணத்தில் 10 சதவீதம்

ஆனால், 2020ல் இருந்து, கால்நடைகள் வாயிலாக மீத்தேன் வெளியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் மொத்த மீத்தேன் வாயு உமிழ்வில், 32 சதவீதம் கால்நடைகளால் உருவாகிறது என, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவிக்கிறது.கால்நடைகளில் இருந்து உருவாகும் மீத்தேனில் 90 சதவீதம், அவை உணவுகளை மெல்வதால் உருவாகிறது. மீதமுள்ள 10 சதவீதம், அவற்றின் சாணம் உள்ளிட்டவற்றால் ஏற்படுகிறது. டென்மார்க்கில் ஒரு பசு, ஆண்டு ஒன்றுக்கு 6.6 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. கடந்த, 2-022 ஜூன் மாத நிலவரப்படி அந்த நாட்டில், 14.85 லட்சம் பசுக்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை