உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / படைத்தளபதிகள் டிஸ்மிஸ்: டிரம்ப் அரசு உத்தரவு

படைத்தளபதிகள் டிஸ்மிஸ்: டிரம்ப் அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல, கடற்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை துணை தலைமை தளபதியும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், தினமும் ஏதாவது சில தடாலாடி உத்தரவை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், இன்று அந்நாட்டு முப்படை தலைமை தளபதி சார்லஸ் பிரவுனை டிஸ்மிஸ் செய்தார். அவருக்கு பதிலாக, விமானப்படையை சேர்ந்த லெப்., ஜெனரல் ஜான் ரஸின் கைன் என்பவரை முப்படை தலைமை தளபதியாக நியமித்தார். இந்த கைன் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.டிரம்ப் இப்படி அறிவித்த சில நிமிடங்களில், கடற்படை தளபதி அட்மிரல் லிஸா பிரான்செட்டி நீக்கப்படுவதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹெக்செத் அறிவித்தார். அதேபோல, விமானப்படை துணை தளபதியான ஜேம்ஸ் ஸ்லைப் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தாமரை மலர்கிறது
பிப் 23, 2025 04:12

கடுமையான அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதால் தான் அமெரிக்கா அமெரிக்காவாக உள்ளது. ஆரம்பகாலங்களில் இந்தியாவிலும் மோடி அதிரடி திட்டங்களை அறிவித்தார். பாட்னவிஸ் அடுத்த பிரதமராக வரும்போது இதைவிட பயங்கரமான அதிரடி திட்டங்களை நிறைவேற்றுவார்.


KRISHNAN R
பிப் 22, 2025 23:18

அப்போ சரி..... எல்லாமே..... இனி


Bye Pass
பிப் 22, 2025 23:00

நீக்கம் செய்யப்பட்ட தளபதிகள் இனி அப்பா ..


மோகன்
பிப் 22, 2025 21:41

தமிழ்நாடு போல் தத்திகளின் ஆட்சியில் மாட்டிக்கொள்வதைவிட சைக்கோ எவ்வளவோ மேல்.


GMM
பிப் 22, 2025 21:19

அமெரிக்கா பாதுகாப்பிற்கு ராணுவம் மிக முக்கியம். படை தளபதிகள் ஒன்றும் குமாஸ்தா அல்ல. ராணுவ ரகசியம் அறிந்தவர்கள். எவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தாலும், ஜனநாயக நாட்டில் சர்வாதிகார நடவடிக்கை கூடாது. பாதுகாப்பு பலவீனம் அடையும். அல்லது தீவிரவாதம் உற்சாகம் அடையும். ஜனநாயக நாடுகள் பலவீனப்படும் .


sridhar
பிப் 22, 2025 20:48

Brake இல்லாத ஹை ஸ்பீட் வண்டி போல் போகிறது டிரம்ப் அமெரிக்கா .


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 22, 2025 20:47

இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கு பின்னால் மிகப்பெரிய காரணங்கள் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக பைடன் ஆட்சியில் ஈரானுக்கு சாதகமான நடவடிக்கைகள், மற்றும் தேவையில்லாமல் உக்ரைனுக்கு அதிகப்படியான உதவிகள் செய்து பிரச்சினையை வளர்த்துவிட்டது போன்றவை.


subramanian
பிப் 22, 2025 20:32

பயந்து போய் விட்டது அமெரிக்கா. டிரம்ப் எடுக்கும் நடவடிக்கை அவரது பதற்றத்தை காட்டுகிறது. வெளிநாட்டு மக்களை அடாவடியாக நடத்தி மறைமுக எதிர்ப்புகள் சம்பாதித்து வருகிறார் டிரம்ப் .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 22, 2025 20:28

ஒரு சைக்கோவிடம் அமெரிக்கா மாட்டிக்கொண்டதோ என்று சந்தேகமாக உள்ளது....!!!


ganesh ganesh
பிப் 22, 2025 21:46

ஆமா இவர் கண்டு படிச்சிட்டஆர் . நீயோ ஒன்னு குடும்பமோ பாதிக்கப்பட்டுருக்கணும் .


Priyan Vadanad
பிப் 22, 2025 22:21

அமெரிக்க அதிபரும் நமது பிரதமரும் தேசியவாதிகள் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார் என்பதை தினமலர் செய்தியில் இன்று வாசித்தேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை