உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தப்பிச்சோம்டா சாமி : 47 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

தப்பிச்சோம்டா சாமி : 47 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்டியான்: லாவோஸில் இணைய மோசடி மையங்களில் சிக்கி இருந்த 47 இந்தியர்கள் அந்நாட்டின் போக்கியோ மாகாணத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்து இருப்பதாவது: லாவோஸில் உள்ள போலி வேலை வாய்ப்புகளுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் அதன் நாட்டினரை எச்சரித்து வருகின்றனர், அதே நேரத்தில் தாங்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்து உள்ளது.மேலும் தெரிவிக்கையில், இந்திய தூதரகம் இது வரை 635 இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பபட்டுள்ளனர். சமீபத்தில் பொக்கியோ சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சைபர் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் விசாரணை நடத்தப்பட்டு தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள 18 பேர் உதவி கோரி தூதரகத்தை அணுகினர். லாவோஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால் கூறியதாவது: மீட்கப்பட்ட 47 பேரில் ஏற்கனவே 30 பேர் இந்தியாவிற்கு பத்திரமாக திரும்பி விட்டனர். மீதமுள்ள 17 பேர் பயண ஏற்பாடுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வது தூதரகத்தின் முதன்மையான விசயம் என்று அவர் கூறினார். முன்னதாக கடந்த மாதம் தென் கிழக்கு ஆசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவோஸ் சோனெக்சே சிபாண்டோன் உடன் இந்தியர்கள் கடத்தல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 31, 2024 22:27

வெளிநாட்டிற்கு பிழைப்புக்காகவும், படிப்புக்காகவும் செல்பவர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவித்துவிட்டா செல்கிறார்கள். ஆனால் சென்றபிறகு பிரச்சினை என்றால் உடனே மத்திய அரசின் உதவியை நாடுவார்கள். மத்திய அரசும் அவர்களுக்கு உதவவேண்டியது அவசியம். இருந்தாலும் போவதற்கு முன்பு தெரிவித்துவிட்டு சொல்லவேண்டியது அவர்கள் கடமை அல்லவா?


சமீபத்திய செய்தி