உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய அணி 43 ரன்களில் அபார வெற்றி

முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய அணி 43 ரன்களில் அபார வெற்றி

கண்டி: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கை துவங்கியது.லெப்டு... ரைட்டு...இலங்கை பவுலர் கமிண்டு மெண்டீஸ் இருகைகளிலும் பந்துவீசி அசத்தல்; ஒரே ஓவரில் சூர்யகுமார் யாதவிற்கு வலது கையிலும், ரிஷப் பண்டுக்கு இடது கையிலும் பந்துவீசி ரசிகர்களை கவர்ந்தார்.இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன் குவித்தார். 214 ரன்கள் என்ற கடின இலக்கை அடைய அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, துவக்கத்தில் அதிரடியா ரன்களை குவித்தது. நிஷாங்கா 79 ரன்கள் குவித்து அவுட் ஆனார். குஷால் மெண்டிஸ் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களுக்குள் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி 43 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ரியான் ப்ராக் 3 விக்கெட்டுகளையும் அக்ஷர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ