உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குவைத்தில் தீ விபத்து; நான்கு இந்தியர்கள் பலி

குவைத்தில் தீ விபத்து; நான்கு இந்தியர்கள் பலி

குவைத்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கேரளாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி பலியாகினர்.கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பசேரி பகுதியைச் சேர்ந்த மேத்யூஸ் முலக்கல், 40. லினி ஆபிரகாம், 38, என்ற தம்பதிக்கு இரின், 14, என்ற மகளும், ஐசாக், 9, என்ற மகனும் இருந்தனர். இந்த தம்பதி, மேற்காசிய நாடான குவைத்தில் பணியாற்றி வந்தனர். அங்கு அப்பாஸிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.சமீபத்தில் விடுமுறை காரணமாக, கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தன் குடும்பத்தினருடன் வந்தார். விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தபின், நேற்று முன்தினம் குவைத்திற்கு மீண்டும் சென்றனர். நேற்று, நான்கு பேரும் தங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.சிறிது நேரத்தில், அவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் என, நான்கு பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்களது வீட்டு 'ஏசி' யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை கண்டறிந்தனர். இறந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை, அங்குள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை