உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவன்: ரூ.5.8 கோடி நிதி திரட்டிய தன்னார்வலர்கள்

அமெரிக்காவில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவன்: ரூ.5.8 கோடி நிதி திரட்டிய தன்னார்வலர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில், மகளை கல்லூரியில் விட சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். அவர்களின் மகன் மட்டும், தனிமையில் கதறி வருகிறார். அவருக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் இணைந்து இணையதளம் மூலம் 7,00,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5.87 கோடி இந்திய மதிப்பில்) நிதி தரட்டி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்விந்த் மணி(45), பிரதீபா(40), ஆண்ட்ரில் (17) . ஆதிர்யான்(14) வசித்துவந்தனர். கடந்த புதன்கிழமை, ஆண்ட்ரிலை கல்லூரியில் விட, அர்விந்த் மணியும், பிரதீபாவும் காரில் சென்றனர். அப்போது, லம்பாஸ் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆதிர்யான் மட்டும் காரில் செல்லாததால் உயிர் தப்பினார். அதிவேகமாக காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.பெற்றோரை இழந்து, உறவினர்கள் இல்லாமல் தவிக்கும் ஆதிர்யானுக்கு உதவுவதற்காக, அங்குள்ள தன்னார்வலர்கள் இணையதளம் மூலம் நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை 7,00,000 டாலர் நிதி சேர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.5.87 கோடி ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சண்முகம்
ஆக 18, 2024 19:30

இறந்த பெண்ணின் பெயர் - அன்றில் பிழைத்த ஆணின் பெயர் - ஆதிரையன்.


chakra
ஆக 18, 2024 19:14

இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . கோடிக்கணக்கில் சொத்து இருப்பவர்கள் எதற்கு இந்த தொழில்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை