உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொறுப்பேற்றது வங்கதேச இடைக்கால அரசு

பொறுப்பேற்றது வங்கதேச இடைக்கால அரசு

டாக்கா, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று இரவு பொறுப்பேற்றது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்ததை எதிர்த்து, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டின் முக்கிய அடையாளங்கள், கோவில்கள், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். விரைவில் பிரிட்டன் செல்ல உள்ளார். இதையடுத்து இடைக்கால அரசு அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்த ராணுவம் , நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் 15 பேர் உறுப்பினர்களாக கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து டாக்காவில் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 09, 2024 00:28

பங்களாதேஷுக்கும் நல்லதல்ல நமக்கும் நல்லதல்ல


V RAMASWAMY
ஆக 08, 2024 22:08

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இவர் பங்களா தேஷில் அமைதியை உடன் நிலை நாட்டி ஹிந்துக்களை, இந்தியர்களை, அவர்கள் உடைமைகளை பாதுகாக்காக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.


அப்னேஷ்
ஆக 08, 2024 22:06

ரொம்பநாள் தாங்காது. மூர்க்ஸ் நல்கவங்களை உயிரோட வெக்க மாட்டாங்க.


N Sasikumar Yadhav
ஆக 08, 2024 20:55

அமிதிக்கான நோபல் பரிசு பெற்றவன் நாட்டில்தான் இந்துக்களை இன அழிப்பு செய்கிறானுங்க அமைதிக்கும் இவன்களுக்கூம் கொஞ்சங்கூட தொடர்பு இருக்காது தவறுதலாக அமிதிக்கான நோபால் பரிசு கொடுத்துவிட்டனர்


Duruvesan
ஆக 08, 2024 20:43

பங்களா தேஷ் பிச்சை கார நாடு ஆகும், தீவிரவாதம் இனி அங்கு வளரும். மேற்கு வங்கம் துணை செய்யும். காஷ்மீர் போல மேற்கு வங்கம் ஆகும். மூர்க்க வெறியர்கள் இனி குண்டு வெடிப்பு செய்வார்கள்


Kasimani Baskaran
ஆக 08, 2024 20:37

தேர்தலில் ஜெயிக்காமல் ஒருவருக்கு பட்டாபிஷேகம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.


Ramesh Sargam
ஆக 08, 2024 20:12

இப்பொழுது பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு அரசியல் கட்சிக்கு அந்நாட்டில் எதிரிகளே இல்லையா? அவர்களை எதிர்த்து பின்னாளில் கலவரம் வெடிக்காதா? அப்பொழுதும் உதவி தேடி இந்தியாவுக்குத்தான் அவர்கள் வருவார்கள். வேறு எந்த நாட்டிற்கும் செல்லமாட்டார்கள். இந்தியா என்றைக்கும் மற்றநாட்டவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் அந்த நல்ல எண்ணத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. எப்படி என்றால், உதவி தேவைப்படும்போது இந்தியா வேண்டும். மற்ற நேரங்களில் இந்தியாவை புறக்கணிப்பர். அது கூடாது.


sankar
ஆக 08, 2024 19:51

அய்யா - நாம் வரலாறு அறிந்தவர்கள் - பாபர், ஹுமாயுன், அவுரங்கசீப் என்று எல்லா அரசனும் தங்கள் சொந்த புதல்வர்கள் மற்றும் உறவுகளால் -கொல்லப்பட்டார்கள் அல்லது சிறை வைக்கப்பட்டார்கள் - அது பரம்பரை இன்றும் தொடர்கிறது


konanki
ஆக 08, 2024 19:39

இவர் தான் பிரதமர்.ஆனால் அதிகாரம் இவரிடம் இல்லை. அதிகாரம் பாகிஸ்தானின் ISI மற்றும் அமெரிக்க CIA பிடியில் கல்யாண பிள்ளை இவரு. ஆனால் சட்டை பேண்ட் இவரோடது இல்லை


Premanathan Sambandam
ஆக 08, 2024 21:12

சூப்பர் கமெண்ட் வாழ்க கோணங்கி அண்ணாச்சி


Srinivasan k
ஆக 09, 2024 08:51

correct. this guy is just a puppet. how can india develop relation. this country is just another pakistan


மேலும் செய்திகள்











புதிய வீடியோ