உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கலவரமாக மாறிய கபாடி போட்டி: பிரிட்டனில் 7 இந்திய வம்சாவளியினர் கைது

கலவரமாக மாறிய கபாடி போட்டி: பிரிட்டனில் 7 இந்திய வம்சாவளியினர் கைது

லண்டன்: பிரிட்டனில் கபாடி போட்டி கலவரமாக மாறிய சம்பவத்தில் 7 இந்திய வம்சாவளி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.பிரிட்டனின் கிழக்கு மிட்லாண்ட் மாகாணத்தில் டெர்பி நகரில் பிரிட்டன் கபாடி கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் கபாடி போட்டி நடைபெறும். இந்தாண்டு வழக்கம் போல துவங்கியது. இதில் இந்திய வம்சாவளி பஞ்சாபி சமூகத்தின் பங்கேற்றனர்.இன்று நடந்த போட்டியின் போது இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டனர். இது கலவரமாக வெடித்தது. அப்போது பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.முன்னதாக போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள் சிலர் துப்பாக்கி, கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்கள் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைடுத்து பல்வேறு பிரிவகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 இந்திய வம்சாவளி இளைஞர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 09, 2024 23:01

போட்டி நடக்கும் இடத்திற்குள் எப்படி ஆயுதம் வைத்திருப்பவர்களை அனுமதித்தனர்? நம்ம ஆளுங்க அங்கேயும் அவர்கள் சேட்டையை ஆரம்பித்துவிட்டனர்.


R Dhasarathan
ஆக 09, 2024 21:51

இப்போதெல்லாம் நம் நாட்டின் பெயரை வெளிநாட்டில் வன்முறை செய்து கெடுக்கும் சம்பவங்கள் அதிகம் பேசப்படுகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை