உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிசின் புன்சிரிப்பு : புடின் விமர்சனம்

கமலா ஹாரிசின் புன்சிரிப்பு : புடின் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விளாடிவோஸ்டாக்: கமலா ஹாரிசின் புன் சிரிப்பே , அவருக்கு எல்லாம் நடந்து விடும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து ரஷ்ய அதிபர் புடின் பேசினார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியலிருந்து விலகியதையடுத்து துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள், கமலா ஹாரிசுக்கு சாதமாக வரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.வோலடிவோஸ்டாக்கில் நடந்த கருத்தரங்கில் புடின் பேசியது, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். இது அவர் எடுத்த சரியான முடிவாக நான் கருதுகிறேன்.கமலா ஹாரிசின் வசீககரமான புன்சிரிப்பே அவருக்கு எல்லாம் நடந்து விடும் என முடிவுக்கு வந்துவிடலாம். ரஷ்யாவிற்கு எதிரான செயல்களை கமலா ஹாரிஸ் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இத்தேர்தலில் யார் அதிபராக வர வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
செப் 12, 2024 09:50

ஜெலின்ஸ்கி போல திறமையான ஸ்டாண்டப் காமெடியன் போல , நாட்டை பற்றிய ஆழ்ந்த அறிவு இருக்குமா ? . . . உக்ரைன் போல போர்களமா ஆக்காமல் இருப்பாரா ?


Sivagiri
செப் 12, 2024 09:43

அர்பன் நக்சல் என்பதற்கு உதாரணமாக இருப்பார் போலிருக்கு. , கமலாவுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, சொந்த தேசப்பற்று , சொந்த மக்கள் மீது பற்று என்பதெல்லாம், எதுவும் இல்லை போல - இங்கே உள்ள ராகுல் போல, எங்கிருந்தோ வந்து, பெயருக்காக, பதவிக்காக, கவர்ச்சிகரமாக, மக்களை தூண்டுவது, துண்டாடுவது போல பேசுவது போல இருக்கிறது


Mohan D
செப் 06, 2024 16:29

நமக்கு ட்ரம்ப் தான் சரிப்பட்டு வருவாரு ..இந்தம்மாவால் இந்தியாவுக்கு அம்மன்சல்லிக்கு பிரயோசனம் இல்ல ....


Palanisamy T
செப் 06, 2024 15:23

ஒருவேளை இவர்கள் வரும் தேர்தலில் வெற்றிப் பெற்றுவிட்டால் உலக வரலாற்றில் தமிழ் பெயரும் சேர்ந்த வொருவர் வெற்றிப் பெற்றுவருவது எதிர்பாராத வொன்று. மேலும் இவர் சென்னையைச் சேர்ந்தவொரு தமிழ் பெண்மணியின் மகளென்று இன்னும் உலகம் சரியாக அறியவில்லை. இவர் ஆப்பிரிக்க அமெரிக்க ஆசிய நாட்டைச் சேர்ந்தப் பெண்மணி என்றுதான் உலகம் இன்னும் பேசிக் கொண்டுவருகின்றது. அன்றுவொரு நிகழ்ச்சியில் இவர்களின் தாயார் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் களென்று பேசியதுமட்டும் ஞாபகம் நல்ல தமிழறிவு மற்றும் நல்ல ஆங்கிலம் கற்றவர்களுக்கும் நல்ல எதிர்க்காலம் அமையுமென்பது மட்டும் நிச்சயம். இந்தவகையில் முன்னாள் இங்கிலாந்து பிரதமரும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவரென்றுவரென்று நாமெல்லாம் அறிந்ததே .


Lion Drsekar
செப் 06, 2024 11:41

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜிம்மிகார்ட்டர் முதல் இவர் வரை 32 பற்களையும் காட்டி சிரிப்பது அவர்களது வழக்கம் . புன்சிரிப்பு என்பது புகைப்படத்தில் உள்ள புதின் அவர்களது சிரிப்புதான் புன்சிரிப்பு , ஏதோ இவர்களால் உலக நாடுகள் சிரிப்பா சிரிக்காமல் ஒற்றுமையாக இருந்தால் சரி, வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 06, 2024 05:34

வெடிச்சிரிப்பு என்றுதான் சொல்லவேண்டும். மிக சிக்கலான கேள்விகள் கேட்காதவரை பிரச்சினை இல்லை. அப்படி யாராவது கேட்டால் டிரம்ப் நல்லவர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.