வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அனுப்பும் போது யோசன பண்ணாம அனுப்பிட்டு திரும்பி வருவதில் ஏண்டா தடுமாடறீங்க.
வாஷிங்டன்: கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து சிதறியதில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்றனர். 8 நாள் ஆய்வுப் பணிக்கு பிறகு அவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 80 நாட்களுக்கும் மேலாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே உள்ளனர். ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டாலும், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இன்றி தனியாக வரும் 6 ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளது. இந்த முடிவை பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு நாசா எடுத்துள்ளது.
அனுப்பும் போது யோசன பண்ணாம அனுப்பிட்டு திரும்பி வருவதில் ஏண்டா தடுமாடறீங்க.