உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,கில் சுதந்திரமாக சுற்றி வரும் பயங்கரவாதி மசூத் அசார்

பாக்.,கில் சுதந்திரமாக சுற்றி வரும் பயங்கரவாதி மசூத் அசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ - முகமதுவின் தலைவர் மசூத் அசார் இறந்துவிட்டதாகவும், படுத்த படுக்கையாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜனவரி 1 முதல் நேற்று முன் தினம் வரை நடந்த தொடர் பயங்கர வாத சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 12 வீரர்கள் மற்றும் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; 55 பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் போர்வையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத்துறை கூறுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wzpvuu1j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெய்ஷ் - இ --- முகமது பயங்கரவாத அமைப்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இதன் தலைவரான மசூத் அசார், ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இவர் பாகிஸ்தான் சிறை மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாயின.இந்நிலையில் அவர் பாகிஸ்தானின், பாவல்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, தற்கொலை படை தாக்குதலுக்கு ஆதரவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதை நம் நாட்டு தனியார் டிவி சேனல், மசூத் அசாரின் பழைய ஆடியோவுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதற்காக சர்வதேச நிதி நடவடிக்கை குழுவால் கிரே பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அப்பட்டியலில் இருந்து 2022ல் தான் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வரும் செய்தி வெளியாகியிருப்பது, அந்நாட்டு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பரதன்
ஜூலை 18, 2024 13:05

விரைவில் மர்ம நபர்களால் காணாமல் போக வேண்டும்


Lion Drsekar
ஜூலை 18, 2024 11:54

ஒரு நாட்டில் பத்திரமாக சுற்றி வருகிறாரக்ள் , ஒரு நாட்டில் ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் . மொத்தத்தில் உலகம் ஒரு உருண்டை , எல்லா இடமும் எல்லோருக்கும் சொந்தம் ஆகவே இவர்கள் மட்டுமே சுதந்திரமாக சுற்றி வரமுடியும் . வந்தே மாதரம்


Anand
ஜூலை 18, 2024 11:17

அவன் தமிழ்நாடு, கேரளா, அல்லது மேற்குவங்கத்தில் இருந்தால் இன்னும் சுதந்திரமாக சுற்றி வருவான்.


தஞ்சை மன்னர்
ஜூலை 18, 2024 11:07

இந்த ஆளைத்தான் மூன்று மாதம் முன்பு சுட்டு கொன்று விட்டார்கள் என்று சொன்னார்கள் இதே பத்திரிக்கையில் வெளியானது இப்போது என்ன இந்த செய்தி அந்த செய்தி உண்மை என்றால் இந்த செய்தி பொய் இந்த செய்தி உண்மை என்றால் அந்த செய்தி பொய் இதில் எது மெய்


Ramesh Sargam
ஜூலை 18, 2024 09:52

தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக துரோகிகள் சுதந்திரமாக சுற்றிவருவதை விடவா…??


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 08:29

அவர் இவர் என்று மரியாதை வேற


சிவம்
ஜூலை 18, 2024 07:19

பல இந்திய இராணுவ வீரர்களை கொன்ற இந்த தீவிரவாதியை, மரியாதையாக அவர்- இவர் என்று குறிப்பிட்டு, செய்தி வெளியிடுவது, ஏற்புடையது அல்ல.


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:29

இந்தியாவை மதத்தை வைத்து பிளவுபடுத்தினால்த்தான் அது திரும்ப முன்னேறாது என்ற பிரிட்டிஷ் தத்துவதில் மாமா மற்றும் தாத்தாவின் உதவியுடன் நிறுவப்பட்டதுதான் பாகிஸ்தான். ஜனநாயக நாடு என்றாலும் அது பல காலமாக தீவிரவாத, இந்திய எதிர்ப்பு சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் இயங்கிவருகிறது. பாகிஸ்தானை அழிக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு வருங்காலம் என்ற ஒன்றே கிடையாது.


மேலும் செய்திகள்