உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிரிக்கெட் வீரர் ஷமிக்கு முஸ்லிம் மதகுரு கண்டனம்; கிளம்பிய எதிர்ப்பு

கிரிக்கெட் வீரர் ஷமிக்கு முஸ்லிம் மதகுரு கண்டனம்; கிளம்பிய எதிர்ப்பு

துபாய்: ரம்ஜான் நோன்பு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு கண்டனம் தெரிவித்த முஸ்லிம் மதகுருவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.கடந்த 4ம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்திய வீரர் முகமது ஷமியின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. அவர் 10 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது, அவர் தண்ணீர் குடித்ததற்கு முஸ்லிம் மதகுரு மவுலானா ஷகாபுதின் ரஷ்வி பரேல்வி கண்டம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நோன்பு இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. யாரெல்லாம் நோன்பை கடைபிடிக்க தவறுகிறார்களோ, அவர்கள் எல்லாம் பாவிகள். இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி நோன்பை கடைபிடிக்கவில்லை. இது குற்ற செயலாகும். நோன்பை மீறியதன் மூலம், மத கொள்கையை மீறியதுடன், பாவத்தை செய்துள்ளார். அவர் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறார் என்றால், அவர் ஆரோக்கியமானவராக இருக்கிறார் என்று தான் அர்த்தம். அப்படியிருக்கும் போது அவர் நோன்பை கடைபிடித்திருக்க வேண்டும். கடவுளுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறியிருந்தார். நாட்டிற்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி மீதான இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனி சட்டவாரியத்தின் உறுப்பினர் மவுலானா கலித் ரஷித் பராங்கி மஹாலி, ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'ஷமி ஒரு கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இது போன்று பயணிப்பவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் சலுகைகள் உள்ளன. அவரிடம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது,' என்றார். ஷமியின் உறவினர் மும்தாஜ் கூறுகையில், 'இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல், சாம்பியன்ஸ் டிராபி பைனலில் கவனம் செலுத்துமாறு எங்களின் குடும்பத்தினர் ஷமியிடம் கூறியுள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் வெட்கக்கேடானது,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Karthikeyan
மார் 08, 2025 17:01

சகோதரி மும்தாஜ் கூறியது சரியே...டேய் மதகுரு ஷமி ஒரு விளையாட்டு வீரர்...அடிக்கிற வெயிலுக்கு தண்ணீரோ...குளிர்பானமோ குடிக்கத்தான் செய்யனும்...மனிதனை காப்பற்றவே மதமும்...வழிபாட்டு முறைகளும்... மதச்சார்பற்ற நாட்டில் நீ உத்தரவு போடமுடியாதுடா...இது பாரதநாடு...நினைவிருக்கட்டும்...


Karthikeyan
மார் 08, 2025 16:56

போயிருப்பான் ப்ரோ...


Mano Viji
மார் 08, 2025 15:37

நாட்டுக்காக விளையாடும் அவர் எப்படி அண்ண ஆகாரம் எடுத்து கொள்ளாமல் இருக்க முடியும். இதிலெல்லாம் மத நம்பிக்கையை திணிக்க கூடாது


Stanlee jo
மார் 08, 2025 15:21

ஹாசிம் ஆம்லா 200 ரன். ராமதான் நோண்பு பின்


kalyan
மார் 08, 2025 14:40

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வேண்டாம் என்பதாலோ என்னவோ பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் டீம்கள் ரமலான் நோன்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே போட்டியிலிருந்து தங்களை விடுத்துக்கொண்டது பயணத்தில் இருப்பவர்களை முஸாபிர் நோன்புக்கு வற்புறுத்துவது அவசியம் இல்லை என்று இஸ்லாம் உணர்த்துவதாக நினைவு கத்தார், சவூதி அரேபியாவில் இருந்தபோது நோன்பு மேற்கொண்ட எனக்கு இந்த வகையில் மதம் விதி விலக்கு அளிக்கும் என்று என் பாகிஸ்தானி மேலாளர் ஒரு முறை அறிவுறுத்தினார் . ஆனாலும் ஒரு அனுபவத்திற்காக நானும் முழுமையாக மேற்கொண்டேன்


UTHAYA KUMAR
மார் 08, 2025 09:33

தனிப்பட்ட விருப்பம் யாரும் கட்டாய படுத்த முடியாது.


Mohan Kulumi
மார் 08, 2025 06:25

Some of the muslim clerics in India still believe that they are in an Pakistan


Iyer
மார் 08, 2025 05:50

நோன்பு கடைபிடிப்பது ஒரு நல்ல செயல்தான். ஆனால் நோயுற்றவர்கள், ராணுவப்பணி மற்றும் தேசசேவை செய்பவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆகையால் ஷமி செய்ததில் தவறு எதுவும் இல்லை.


surya krishna
மார் 08, 2025 00:56

ivarkal arivillatha matha veri piditha aattu manthai koottam


naranam
மார் 07, 2025 22:53

இதெல்லாம் ஒரு செய்தின்னு... ஷம்மி கூட இதப் பத்திக் கண்டுக்கல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை