உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக்: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி

ஒலிம்பிக்: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் வென்றது.ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி,ஸ்பெயின் அணியுடன் .உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியுடன் 7 ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி மோதியது.ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 2 கோல் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். . இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 4 வெண்கலம்

இதன் மூலம் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஸ்ரீஜேஷ் ஒய்வு

இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற ஸ்ரீஜேஷ் இத்துடன் தனது ஒய்வை அறிவித்தார். வெண்கலம் வென்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த ஒலிம்பிக் போட்டியுடன் தாம் ஒய்வு பெறுவதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vbs manian
ஆக 08, 2024 20:27

மகிழ்ச்சி. அதே சமயம் உலக மேப்பில் கடுகளவு தோன்றும் மொரோக்கோ ஜமைக்கா போன்ற நாடுகள் தங்கம் வாங்குகின்றன.


sridhar
ஆக 08, 2024 21:08

நம் பெண்கள் கூட நிறைய தங்கம் வாங்குகிறார்கள், கடையில் ..


Ramesh Sargam
ஆக 08, 2024 20:07

இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு பாராட்டுக்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி