உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா தயார்: உக்ரைன் மவுனம்

போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா தயார்: உக்ரைன் மவுனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: போரை நிறைவு செய்வதற்காக ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ''உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள, அதிபர் புடின் தயாரக உள்ளார் என 4 ரஷ்ய அதிகாரிகள் கூறினர். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக புடின் கருதுகிறார்'' என தெரிவித்துள்ளது.

ரஷ்யா சொல்வது என்ன?

இது குறித்து, நிருபர்கள் கேள்விக்கு ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ, '' போரை நிறைவு செய்வதற்காக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. போரை நாங்கள் விரும்பவில்லை'' என பதில் அளித்தார்.

உக்ரைன் மவுனம்

ரஷ்யா உடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

குமார் சென்னை
மே 25, 2024 16:29

ரஷ்யாவை உக்ரைனால் ஒன்றும் செய்ய முடியாது. பிரச்னை ஜெலன்ஸ்கி என்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையான வஞ்சகனால் உக்ரைன் பற்றி எரிகிறது . போர் நின்றால் அவர்கள் ஜெலன்ஸ்கியை அழித்து விடுவர். எனவே அவதிப்படுவது உக்ரைன் மக்கள் மட்டுமே. அவர்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.


ஆரூர் ரங்
மே 25, 2024 12:23

ஒரு புறம் அணு ஆயுதம் தயார். மறுபுறம் போர் நிறுத்தம்ன்னு அறிக்கை.


வைசாலி
மே 25, 2024 11:40

அப்படியெல்லாம் நிறுத்திட முடியாது. ரஷ்யாவின் தாக்குதலால் பல லட்சம்.கோடிக்கு நஷ்டம் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவை நெருக்கி அதன் எண்ணெய் வளங்களை சுரண்டாமல் விடமாட்டார்கள். ரஷ்யாவை ஆதரித்த சீனாவுக்கும் ஆப்பு நெருக்கும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ