உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் உயரிய விருது : மோடிக்கு வழங்கி கவுரவித்தார் புடின்

ரஷ்யாவின் உயரிய விருது : மோடிக்கு வழங்கி கவுரவித்தார் புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0v24rck&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (09.07.2024) நடந்த நிகழ்வில் ரஷ்யாவின் உயரிய விருதான ‛‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ ''விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி விளாடிமிர்புடின் கவுரவித்தார். இந்த விருது கடந்த 2019-ம் ஆண்டு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இடையில் கோவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.இன்று விருது வழங்கி கவுரவித்தார் ரஷ்ய அதிபர் புடின்

மோடி நன்றி

இது குறித்து மோடி கூறியது, புடினுக்கு எனது இதயபூர்வ நன்றி. எனக்கு வழங்கப்பட்ட விருது 140 கோடி இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை. இரு நாடுகளிடையேயான பரஸ்பரம், நம்பிக்கை, ஆழமான நட்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட மரியாதை என்றார்.

புடின் மகிழ்ச்சி

புடின் கூறியது, மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய -ரஷ்ய உறவு வலுப்பெற்றுள்ளது. பிரதமர் மோடிக்கு விருது வழங்கியதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்புசாமி
ஜூலை 10, 2024 10:13

போரை நிறுத்தப் போனேன்... ஒரு மெடலை வாங்கி வந்தேன்...அதை கேட்டு வாங்கி வந்தேன்.


Barakat Ali
ஜூலை 11, 2024 08:19

நாரசொலி படிப்பவர்களுக்கு இறைவன் "அங்கே" மூளையை வைத்துவிட்டான் ..


subramanian
ஜூலை 09, 2024 22:28

கொரோனாவுக்கு பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷிய ஆதரவு அவசியம்.


subramanian
ஜூலை 09, 2024 22:23

ரஷ்யா நமது நீண்ட கால நண்பன். அமெரிக்கா நமது புதிய நண்பன். சீனா நமது பழைய நன்றி மறந்த மாணவன்.


விஜிமோகன்
ஜூலை 09, 2024 21:56

சண்டையெல்லாம் நிறுத்த முடியாதுன்னுட்டு ஒரு மெடல் குத்தி அனுப்பிச்சுட்டாரு. இவுரு இந்தில பேச புட்டின் பேந்த பேந்த விழிப்பதும் டி.வி ல காட்டுறாங்க.


வாசகர்
ஜூலை 09, 2024 23:08

AI அதாவது செயற்கை நுண்ணறிவின் மூலம் உடனே மொழி பெயர்ப்பு செய்து விருப்பட்ட மொழியில் கேட்க்கலாம். நமது பாராளுமன்றத்தில் இந்த வசதி உள்ளது. 200 ரூபாய் உபிஸீக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை, தெரிந்திருந்தால் உபிஸாச இருக்க மாட்டார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 21:31

டீம்கா கூலிப்படை மெம்பர்ஸ், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறல் ... புலம்பல் .. அழுகை ... விசும்பல் ...


Santhakumar Srinivasalu
ஜூலை 09, 2024 20:51

நம்ம பிரதமர் அமெரிக்கா பக்கம் சாயக்குடதுன்னு ரஷ்யா காரன் தூண்டில் போடரான்!


RAMESH KUMAR R V
ஜூலை 09, 2024 20:47

ஜெய் ஹிந்த்


Swaminathan Ctc
ஜூலை 09, 2024 20:11

இந்தியன் perumaipadukiren,manbumiku,putin,sir


மேலும் செய்திகள்