உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் ‛குவாட் தலைவர்கள் மாநாடு: பைடனுக்கு பிரியாவிடை

அமெரிக்காவில் ‛குவாட் தலைவர்கள் மாநாடு: பைடனுக்கு பிரியாவிடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; அமெரிக்காவில் 21-ல் அதிபர் ஜோபைடன் நடத்த உள்ள குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு மற்றும் பிரியாவிடை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.இந்த அமைப்பின் தலைவர்கள் மாநாடு அமெரிக்காவில் ஜோபைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரின் டெலாவ்ரே என்ற இடத்தில் 21-ம் தேதி நடக்கிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் இத்துடன் அதிபர் ஜோபைடனின் பதவி காலம் நிறைவடைவதால், பிரியாவிடை நிகழ்வும் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குவாட் அமைப்பில் உள்ள உறுப்பு நாட்டின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 13, 2024 05:32

தென் சீனக்கடலில் சீனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கு சீனா தொல்லை கொடுக்கவில்லை - மாறாக மற்ற நாடுகளை தொடர்ந்து மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை