உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா விண்வெளி பயணம்: 3வது முறையாக சாதனை

சுனிதா விண்வெளி பயணம்: 3வது முறையாக சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹூஸ்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' விண்வெளித் துறையிலும் இறங்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அது ஈடுபட்டது. பலமுறை திட்டமிட்டும், தொழில்நுட்பக் காரணங்களால், இந்தப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், போயிங் நிறுவனத்தின், 'ஸ்டார்லைனர்' என்று பெயரிடப்பட்டுள்ள ராக்கெட் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், 58 மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், 61, பயணித்தனர்.போயிங் நிறுவனத்தின் ராக்கெட் ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இவர்கள் சென்று திரும்ப உள்ளனர்.ஏற்கனவே, 2006 மற்றும் 2012ல் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அப்போது, விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்தார்.அமெரிக்க கடற்படை அகாடமியில், 1987ல் பயிற்சி முடித்த அவர், கடற்படையில் இணைந்தார். 1998ல் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவால், விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்துக்குப் பின், சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் நாசா திட்டத்தில், இரண்டாவது தனியார் நிறுவனமாக, போயிங் தற்போது இணைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூன் 07, 2024 11:43

இன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை வெற்றிகரமாக சேர்ந்தனர். அதில் சுனிதா அவர்கள் நுழையும்போது துள்ளி, நடனமாடி நுழைந்தார். அந்த அளவுக்கு மகிழ்ச்சி அவருக்கு. அந்த துள்ளல் வெகு சிறப்பு. மிக்கவும் மகிழ்ச்சி அளிக்கும் துள்ளல். ஆனால், இங்கே பல கூட்டணிகளை வைத்து, தேர்தலில் வெற்றிபெற்று, இருந்தாலும் மத்தியில் ஆட்சியை பிடிக்கமுடியாமல் ஒரு சிலர் துள்ளுவதுதான் தாங்கமுடியவில்லை.


Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:35

சுனிதா வில்லியம்ஸ், மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் - இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சாதனை தொடரட்டும்.


கண்ணன்
ஜூன் 06, 2024 10:10

போயிங் தனது விமானங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கலாமே!


Priyan Vadanad
ஜூன் 06, 2024 00:04

பாஜகவின் உணர்ச்சிமிக்க பரிந்துரையாலும் , நமது பிரதமரின், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரது தீவிர முயற்சினாலும், நமது நாட்டு கண்மணியாம் இந்த பெண்மணிக்கு கிடைத்த கவுரவத்துக்காக மனதார வாழ்த்துவோம். இந்த பதிவுக்கு அதிகமான லைக்ஸ் கிடைக்கும் /


V Venkatachalam, Chennai-87
ஜூன் 06, 2024 07:53

வாழ்த்துக்கள்.. வெற்றி பயணம் தொடரட்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை