உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவிக்க மம்தாவுக்கு பயங்கரவாதி வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவிக்க மம்தாவுக்கு பயங்கரவாதி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவித்து, மோடியின் ஆட்சியில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்' என, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, வங்கதேச பயங்கரவாதி கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ராணுவம் நிறுவிய, நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு அமைந்துள்ளது.இதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.வங்கதேசத்தில் இயங்கி வரும், அல் - குவைதா ஆதரவு, ஏ.பி.டி., எனப்படும் அன்சாருல்லா பங்களா டீம் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜஷீமுதீன் ரஹ்மானியும், பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இவர் சமீபத்தில் பேசியதாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து, அடைக்கலம் கொடுத்துள்ளது; இதை ஏற்க முடியாது. வங்கதேசத்தில் பிரச்னையை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது.வங்கதேசம் ஒன்றும், சிக்கிமோ, பூட்டானோ அல்ல. இது, 18 கோடி முஸ்லிம்கள் உள்ள நாடு. சீனா உதவியுடன், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை துண்டிப்போம்.ஜம்மு - காஷ்மீருக்கு விடுதலை பெற்றுத் தருவோம். இதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உதவிட வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.மோடியின் அரசில் இருந்து மேற்கு வங்கத்துக்கு விடுதலை தர வேண்டும். அதை தனி நாடாக அறிவிக்க வேண்டும். இதை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Karthikeyan
செப் 16, 2024 16:08

டேய் எங்க பாரதத்தை கூறுபோடுவதற்கு ... முதலில் உன் நாட்டிலுள்ள எமது மக்களை சுதந்திரமாக செயல்படவிடுடா .... நீயெல்லாம் ஒரு ஆளாடா எங்களுக்கு...


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 16, 2024 10:01

மதிப்பிற்குரிய மாண்புமிகு மேற்கு வங்க முதலமைச்சர் திருமதி மம்தாஜி அவர்களின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தான் கோரிக்கை விடுத்திருப்பார். எப்படி இலங்கை பிராபாகரன் இருந்த போது தமிழகத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இணைத்து தனி நாடாக அறிவித்து இருந்தானரோ அதே திராவிட மாடல் தான் இதுவும். தமிழக மக்களே இலவசங்களுக்கு அடிமைகள் ஆகி வீட்டீர்கள். இனி கூடிய சீக்கிரம் சுதந்திரத்தை இழந்து ஷரியத் சட்டப்படி அடிமைகளாக தான் வாழ போகிறார்கள் உங்கள் பேரன் பேத்திகள். இந்த தலைமுறையோடு வாக்களிக்கும் முறை ஒழிந்து விடும். இனி சீனா அரபு நாடுகள் போல் ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களாகவே அவர்களை தேர்தெடுத்து கொண்டு மக்களை அடிமைகளாக வைத்திருப்பார்கள். இப்பொழுது விழித்துக் கொண்டால் உங்கள் பேரன் பேத்திகள் சுதந்திரமாக செயல்படலாம். இல்லை எங்களுக்கு இலவசங்கள் ஓட்டுக்கு பணம் தேவை என்று நினைத்தால் உங்கள் பேரன் பேத்திகள் சுதந்திரத்தை இழந்து அப்போது உங்களை வசைபாடிக்கொண்டு அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டியது தான். இப்போது கடவுள் பக்தி இல்லாமல் கோவிலுக்கு போகாதவர்கள் எல்லாம் தினமும் ஜந்து முறை கட்டாய தொழுகை செய்ய வேண்டியது இருக்கும். வாழ்க தமிழகம். வளர்க இலவசங்கள்.


வாய்மையே வெல்லும்
செப் 16, 2024 07:39

எங்களுக்கு மம்தா வேணாம் .. அவங்க தான் வேணும் என நீங்க சொன்ன . உடனே கூட்டிட்டு பங்களாதேஷ் அரசி ஆகிடுங்க. எங்களுக்கும் தொல்லைவிட்டுது


வாய்மையே வெல்லும்
செப் 16, 2024 07:38

பொய் புரட்டு நயவஞ்சகம் செய்யும் ஒரே இடம் அமைதிக்கும் இவர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என அடித்து சொல்லமுடியும் . நீங்க வேணா ராவுளை கேட்டுப்பாருங்க இந்தச்செய்திக்கு வாய்மூடி கைகட்டி வேடிக்கை பார்ப்பார் . அவருக்கு வேண்டியது இந்தியாவில் குழப்பம்


Annamalai Al
செப் 16, 2024 02:27

ரஹீமனின் கழுத்தை துண்டிக்க வேண்டும்….


Anonymous
செப் 15, 2024 11:07

இந்த நேரத்தில ரஜினியோட அருணாச்சலம் படத்து வசனம் தான் ஞாபகம் வருது," வா அருணாச்சலம், நீ வருவேன்னு எனக்கு நல்லா தெரியும்", இந்த மாதிரி " வேண்டுகோள்" ஒரு நாள் மிரட்டலா வரும்னு எல்லாரும் எதிர் பார்த்தது தான்.


சுலைமான்
செப் 15, 2024 09:28

மம்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாகதான் செயல்படுவார் என்று நினைத்து இது போன்க்ஷு பேசுகின்றான் இந்த தீவிரவாத ...


GMM
செப் 15, 2024 09:01

உச்ச நீதிமன்றம் திமுக , கெஜ்ரிவால் , மம்தா வழக்குகளை அரசியல் கோணத்தில் விசாரிப்பதன் எதிர் விளைவு பிரிவினையில் போய் முடியம் . நல்ல குடிமக்கள் குற்றவாளிகளை , ஊழல் பேர்வழிகளை விரும்ப மாட்டார்கள் . இந்த மாநில முதல்வருக்கு பின்னால் , ஊடுருவல் , சதி திட்டம் தீட்டுவது எளிது. இவர்கள் ஊழல் குற்றங்கள் தீவிரவாதிகள் நன்கு அறிந்து இருப்பர் . இதனால் குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய சூழல். வழக்கறிஞர் குற்றவாளிக்கு சாதகமாக வாதிட வேண்டிய அவசியம் என்ன ? நீதிமன்றம் ஜாமின் போன்ற சலுகை வழங்க வேண்டிய அவசியம் என்ன ? பயங்கரவாதிகள் உயிர் பெற்றுவிடுவர்


எஸ் எஸ்
செப் 15, 2024 07:31

இது ஒன்றே போதும் காங்கிரஸ் ஏன் பதவிக்கு வரக்கூடாது என்பதற்கும் மோடிஜி யின் கரங்கள் வலுவடைய வேண்டும் என்பதற்கும்


sridhar
செப் 15, 2024 07:30

இன்னமும் விழித்துக்கொள்ளாத தமிழக ஹிந்துக்கள் மாக்கள் .