உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பை தோற்கடிக்க தக்க தருணம்: கமலா ஹாரிஸை ஆமோதித்து ஜோ பைடன் கருத்து

டிரம்பை தோற்கடிக்க தக்க தருணம்: கமலா ஹாரிஸை ஆமோதித்து ஜோ பைடன் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டிரம்பை தோற்கடிக்க வேண்டிய தக்க தருணம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வரும் நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அட்லாண்டாவில் நடந்த விவாத நிகழ்ச்சியில், டிரம்ப் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிபர் பைடன் திணறினார். இது ஜனநாயகக் கட்சி மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக, அதிபர் பைடன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்க உள்ளார். இந்நிலையில், இன்று(ஜூலை 22) எக்ஸ் சமூகவலைதளத்தில், ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளை செய்வேன்.இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டிரம்பை தோற்கடிக்க வேண்டிய தக்க தருணம் வந்துவிட்டது. இவ்வாறு ஜோ பைடன் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் வென்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார். அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை துவங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rama adhavan
ஜூலை 22, 2024 20:25

கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு. எனவே டிரம்ப் தான் ஏறகுறைய வெற்றி.


Easwar Kamal
ஜூலை 22, 2024 20:25

biden பெருந்தண்மைக விலகி கமலா ஹாரிஸ் கை காட்டி உள்ளார். இன்னும் 3 மாதமே உள்ளது. திருடன் trumpai தூக்கி உள்ளெ வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இன்னும் இந்த 3 மதம் திறம்பட உழைத்தால் ஜெயிக்கலாம். நம் தமிழர்கள் இந்தியாவில் கூட பிரிதமர் பொறுப்பில் இருந்தது கிடையாது. காமராஜருக்கு கிடைத்தும் வெற்றி பெற முடியவில்லை. கண்டிப்பாக இந்தியர்களில் தமிழர்கள் ஒட்டு உங்களுக்குத்தான். விவேக் ராமசாமி போன்று சிறப்பான தமிழ்களை தேர்ந்து எடுத்து உழைத்தால் இந்தியர்கள் ஒட்டு உங்களுக்கு கிட்டலாம். இதுக்கு நடுவில் திருடன் டிரம்ப், vens துணை பிரிதமராக தேர்ந்து எடுத்து வைத்து உள்ளன, இந்த vens மனைவி தெலுங்கு பேசுபவர். இந்த கோல்டி கூட்டம் வரிஞ்சு கட்டி வேளை ப்பபனுவ. நம் தமிழர்கள் ஒப்பிரு இணைந்து கமலா ஜெயிக்க படு பட வேண்டும்.


vk
ஜூலை 23, 2024 00:14

ஏன் நம்ம சுடலை கூட அமெரிக்கா அதிபராக்கிடலாமே


இவன்
ஜூலை 23, 2024 05:03

தமிழன் அதுனால கமலா ஹரிஸ் வெற்றி பெறணுமா, எதுக்கு இந்த பொழப்பு. டிரம்ப் வந்த அரேபிய நாடுகளுக்கு சங்கு


Ramesh Sargam
ஜூலை 22, 2024 18:11

ட்ரம்ப் காதில் குண்டடி பட்டுக்கொண்டு ஏற்கனவே “சிம்பதி” வோட்டுக்கள் அள்ளிட்டார். நீங்க புதுஸ்ஸா ஏதாவது ட்ரை பண்ணுங்க.


vaiko
ஜூலை 23, 2024 00:55

அமெரிக்கர்கள் என்ன சங்கிகளா? முட்டாள்தனமாக வாக்களிப்பதிற்கு ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை