உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உறவுக்கார பெண்ணுக்கு டார்ச்சர்: இந்திய தம்பதியருக்கு சிறை

உறவுக்கார பெண்ணுக்கு டார்ச்சர்: இந்திய தம்பதியருக்கு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : படிக்க வைப்பதாகக் கூறி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று உறவினர் பெண்ணை தங்கள் கடைகளில் பணியாற்ற வைத்ததுடன், உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்திய இந்திய- தம்பதிக்கு சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஹர்மன்பிரீத் சிங், 31, மற்றும் குல்பீர் கவுர், 43, என்ற இந்திய தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் அங்கு பெட்ரோல் பங்க் மற்றும் பல்பொருள் அங்காடி நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு, தங்கள் உறவினர் பெண்ணை படிக்க வைப்பதாக கூறி, அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர்.அப்போது, அப்பெண்ணின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்த இத்தம்பதி, தங்களின் பெட்ரோல் பங்க், பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் காசாளராகவும், கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது என நாளொன்றுக்கு 12 முதல் 17 மணி நேரம் வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினர். இது தவிர, அப்பெண்ணிற்கு, உடல் மற்றும் மன ரீதியாகவும் தொல்லை அளித்தனர்.தன் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அளிக்கும்படி கேட்ட அந்த பெண்ணை, தம்பதியர் அடித்து உதைத்ததுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு வரை இதே நிலை நீடித்துள்ளது. இதற்கிடையே, அப்பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.ஹர்மன்பிரீத் சிங் மற்றும் குல்பீர் கவுருக்கு எதிரான குற்றச்சாடுகள் அனைத்தும் உரிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு முறையே 11 ஆண்டு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு தொகையாக 1.87 கோடி ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
ஜூன் 27, 2024 09:54

வெளிநாடுகளில் நான் நேரில் கண்டது பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து சமையல் வேலைகளை முடித்து, வேலைக்கு போவோருக்கு காலை சிற்றுண்டி ,மத்திய தயாரித்துக் கொடுத்து அவர்கள் வேலைக்கு சென்றபின்பு வீட்டைச் சுத்தம் செய்து துடைத்து பாத்திரங்களைக்கழுவி, முதல்நாள் துணிகளை மெஷினில் துவைத்து பின்பு உலரவைத்து, மாலை ஸ்னாக்ஸ் தயார் செய்து, குடும்பத்தார் வந்தவுடன் அவர்களுக்கு எல்லாவற்றையும் மாறிமாறி, அவர்கள் கொண்டுவந்த சாப்பிட்டு பாத்திரங்களை கழுவி காயவைத்து, இரவு சாப்பாட்டுக்கு சூடாக குடும்பத்தார் மட்டும் இல்லை அவர்கள் சார்ந்த நண்பர்கள் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கும் விருந்து சமையல் செய்து கொடுத்து, எல்லோரும் படுக்க செல்வதற்கு இரவு 11 மணி ஆகும், பிறகு இவர்கள் வேலைக்கு செல்பவர்களின் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அவர்களது அறைகளில் வைத்துவிட்டு படுக்கப்போகிறார்கள். அந்த தெய்வப்பெண்மணிகள் எப்போது சாப்பிடுகிறார்கள் என்று அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும் . வந்தே மாதரம்


Senthoora
ஜூன் 27, 2024 08:49

சொந்த நாட்டில் வேலை ஆட்களுக்கு செய்யும் தில்லுமுல்லுகளை மேல்நாடுகளில் அதே சண்டித்தனம் காட்டினாள் இப்படி குடும்பத்துடன் கம்மிதான் ஏன்னனும்.


S. Gopalakrishnan
ஜூன் 27, 2024 07:58

மனைவி இவரை விட பன்னிரண்டு வயது பெரியவர்! என்ன கலியாணமோ ?


Natarajan Ramanathan
ஜூன் 30, 2024 01:37

அரசு பணியில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக பதிமூன்று வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்துகொண்டதாக ஒருவர் நீயா நானாவில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டாரே....பணம் எதுவும் செய்யும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை