உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மற்றொரு விவாதம் நடத்துவோம்: பைடனுக்கு டிரம்ப் மீண்டும் சவால்

மற்றொரு விவாதம் நடத்துவோம்: பைடனுக்கு டிரம்ப் மீண்டும் சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சக போட்டியாளரான அதிபர் ஜோ பைடனுக்கு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சவால் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, களம் காண்கிறார். பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி கடந்த 27ல் நடந்தது. இதில் டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பைடன் திணறினார். இதையடுத்து, அதிபர் வேட்பாளரில் இருந்து ஜோ பைடனை மாற்ற வேண்டும் என, அவரது கட்சியினரே குரல் கொடுத்தனர். எனினும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், புளோரிடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், பைடனை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருப்பதாக மீண்டும் சவால் விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகத்தின் முன் தன்னை மீட்டுக் கொள்ள ஜோ பைடனுக்கு நான் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க தயாராக உள்ளேன். இந்த வாரம் மற்றொரு விவாதத்தை நடத்துவோம். ஆனால், இந்த முறை எங்கள் இருவருக்குமான விவாதம், பார்வையாளர்கள், நடுவர்கள் யாரும் இன்றி நடக்க வேண்டும். எந்தநேரத்தில், எங்கு நடக்க வேண்டும் என்பதை பைடன் தரப்பினரே முடிவு செய்யட்டும். அதேபோல், அவருடன் 'கோல்ப்' விளையாடவும் நான் தயாராக உள்ளேன். இதில், பைடன் வெற்றிபெற்றால், அவர் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Swaminathan L
ஜூலை 11, 2024 17:03

இந்த முறை ட்ரம்ப் நல்ல வெற்றியைப் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Balasubramanian
ஜூலை 11, 2024 09:33

Trump: தில் இருந்தா என் கூட மீண்டும் மோத தயாரா? Biden: வள வள கொள கொள, இதுக்கு நீ பதில் சொல்லு பார்க்கலாம்


Rpalnivelu
ஜூலை 11, 2024 07:47

டொனால்ட் டிரம்ப் அமெரிக்கர்களின் ஏகோபித்த தலைவராக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பதவிக்கு வந்தால் உக்ரைன் போர் முடிவுக்கு வந்துரும். சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும். இந்தியாவுடனான நட்புறவு அதிகமாக பலப்படும். ரஷ்ஷிய அமெரிக்க இந்திய உறவு புதிய உச்சத்தை எட்டும் இந்திய பொருளாதாரம் மிக உயரும். மொத்தத்தில் உலகத்தில் ஓரளவு அமைதி ஊஞ்சலாடும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 10:48

\\ சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும். //// வெளிநாட்டுக் கொள்கை யார் அதிபராக இருந்தாலும் மாறாது .....


ராமகிருஷ்ணன்
ஜூலை 11, 2024 07:05

டிரம்பு தைரியம் இருந்தால் எங்க அண்ணன் ஸ்டாலின் உடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை