உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலாவுக்கு எதிரி துளசி: கைகோர்த்து களம் இறங்கிய டிரம்ப்!

கமலாவுக்கு எதிரி துளசி: கைகோர்த்து களம் இறங்கிய டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தில் சிறப்பாக செயல்பட தயாராகி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , ஜனநாயக கட்சி முன்னாள் தலைவர் துளசி கபார்டின் உதவியை நாடியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பர்.

செப்.,10ல் விவாதம்

வரும் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விவாத நிகழ்ச்சியில் டிரம்பும், கமலாவும் பங்கேற்க உள்ளனர். விவாதத்தில் எப்படியாவது கமலாவை வீழ்த்தி விட வேண்டும் என டிரம்ப் பல்வேறு முயற்சி செய்து வருகிறார்.

யார் இந்த துளசி?

கடந்த 2020ல் நடந்த விவாதத்தில் கமலாவை தோற்கடித்தவர், அவரது கட்சியை சேர்ந்த துளசி கபார்டு. ஜனநாயகக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் துளசி. ஹவாய் மாவட்டத்தின் அரசு பிரதிநிதியாக இருந்தவர். இவரும் 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். இதற்கென உட்கட்சி தேர்தல் 2019ல் நடந்தபோது, களத்தில் இருந்த கமலா ஹாரிசுக்கும் துளசிக்கும் விவாதம் நடந்தது. இதில் கமலாவை விட சிறப்பாக செயல்பட்ட துளசி, விவாதத்தில் வெற்றி பெற்றாார். அப்போது முதல் கமலாவுக்கும், துளசிக்கும் வெளியில் சொல்ல முடியாத பகை உள்ளது. தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராகி, அதிபர் தேர்தல் களம் வரை வந்து விட்டார்.

துளசியின் உதவியை நாடிய டிரம்ப்

ஆனால், துளசியோ, ஜனநாயக கட்சியில் இருந்து 2022ல் வெளியேறி விட்டார். வீட்டில் சும்மா இருந்தவரை, தனக்கு ஒத்தாசையாக தேர்தல் வேலை பார்க்கும்படி கோரியுள்ளார் டிரம்ப். அவரிடம் விவாதத்தின் போது சிறப்பாக செயல்படுவது குறித்து டிரம்ப் பயிற்சி பெற்று வருகிறார்.

நிரூபணம்

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: அரசியல் வரலாற்றில் சிறந்த விவாதம் செய்பவர்களில் ஒருவராக டிரம்ப் நிரூபிக்கப்பட்டுள்ளார். இது ஜோ பைடன் உடனான விவாதம் மூலம் நிரூபணம் ஆனது. அவருக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால் துளசி கபார்டை இந்த தேர்தல் விவாதத்துக்காக சந்தித்து பேசி தயாராகி வருவது உண்மை தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஆக 17, 2024 20:50

இந்திய வம்சாவளியினர் அங்கேயும் கலக்குகிறார்கள்.


வைகுண்டேஸ்வரன்
ஆக 17, 2024 20:33

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 6000 டாலர் என்று கமலா ஹாரிஸ் அறிவிப்பு. 1000 ரூபாய் உரிமைத்தொகையை எதிர்த்து பேசியவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


sankaranarayanan
ஆக 17, 2024 20:23

சரியான போட்டி இருவரும் இந்திய வம்சாவளியைசேர்ந்தவர்கள் எப்படி அமெரிக்க இவர்களை தனக்கு சாதகமாக பயப்படுத்திக்கின்றனர் என்று மக்கள் எண்ணவேண்டும்


sundarsvpr
ஆக 17, 2024 18:45

அமெரிக்காவை பொறுத்தவரை யார் வந்தாலும் ஒன்றுதான். காரணம் அமெரிக்க வியாபாரி


என்றும் இந்தியன்
ஆக 17, 2024 18:42

கமலாவாம் துளசியாம்?? கேட்டால் அவர்கள் இந்தியர்களாம்???இந்தியர்கள் எப்படியய்யா அமெரிக்க குடியரசில் தேர்தல்ல போட்டி போட முடியும்?? உலகம் பூராவும் திருட்டு திராவிட மாடல் தான் நடக்கபோகின்றது என்று ஸ்டாலின் சொன்னது அப்படியே நடக்கின்றது. டாஸ்மாக்கினாட்டில் ஸ்ரீலங்கா மலையாள, தெலுங்கு, கன்னட ஆட்சி 1967லிலிருந்து நடக்கின்றது இப்போ அமெரிக்காவில் இந்தியர் ஆட்சி நடக்கும் அப்படித்தானே.


Senthoora
ஆக 17, 2024 17:44

எவ்வளவுதான் கும்மி அடித்தாலும் இவங்க யாருமே இந்தியாவை கண்டுகொள்ள மாட்டாங்க, தேர்தல் ஒட்டுக்குக்காக இப்போ இந்தியாவை கவர்ந்து பேசி., இந்திய மக்களின் ஓட்டுக்களை பெற முயட்சிக்கிறார்கள். அவ்வளவுதான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 16:15

அவருக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால் துளசி கபார்டை இந்த தேர்தல் விவாதத்துக்காக சந்தித்து பேசி தயாராகி வருவது உண்மை தான் ..... முன்னுக்குப்பின் முரணா இருக்கு ......


SANKAR
ஆக 17, 2024 17:45

it is like Modi consulting Nitish and NCB!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 16:14

துல்சி கப்பார்டு ஹிந்து மதத்தின் மீது அதிக மரியாதை உள்ளவர் ..... அவ்வளவுதான் .... மதம் மாறவில்லை .... அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்லர் ....


SANKAR
ஆக 17, 2024 17:48

news does not say Tulsi is of Indian origin


ஆரூர் ரங்
ஆக 17, 2024 14:28

அங்கேயும் பிரஷாந்த் கிஷோர் வேண்டியிருக்கிறது. துளசிக்கு துண்டு சீட்டில் எழுத வருமா ?


Rihun
ஆக 17, 2024 14:11

துளசி கப்பர்ட் இந்திய வம்சாவளி அல்ல.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி