உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் உறவு: நடிகை வாக்குமூலம்

டிரம்ப் உறவு: நடிகை வாக்குமூலம்

வாஷிங்டன், :அமெரிக்க அதிபர் பதவிக்கு, வரும் நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலையில் உள்ளார், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 77.

பெரும் பரபரப்பு

கடந்த 2017 முதல் 2021 வரை அதிபராக அவர் இருந்தார். 2016ல் நடந்த தேர்தலின்போது, அவருக்கு எதிராக பல பெண்களுடனான உறவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக பல பேட்டிகள் அளித்தார். 2011ல் இருந்து இது தொடர்பாக அவர் பல தகவல்களை வெளியிட்டாலும், 2016ல் அதிபர் தேர்தலுக்கு முன், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், டொனால்டு டிரம்ப் உடனான உறவுகள் குறித்த தகவல்களை வெளியிடாமல் இருக்க, அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான வழக்கு, தற்போது நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டார்மி, ஹோட்டல் ஒன்றில் தனிமையில் சந்தித்தது தொடர்பான பல தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார்.

நடவடிக்கை

'டிவி' தொடர் ஒன்றில் வாய்ப்பு வாங்கித் தருவதாக தனக்கு டிரம்ப் உறுதி அளித்தது, உடலுறவில் ஈடுபட்டது உள்ளிட்ட விபரங்களை அவர் வெளிப்படுத்தினார்.இந்த வழக்கின் தீர்ப்பு, அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பெண்களுடனான டிரம்ப் நடவடிக்கைகள் தொடர்பாக, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sck
மே 09, 2024 14:17

அது டொனால்ட் இல்லீங்க


kulandai kannan
மே 09, 2024 14:10

பல் இருக்கிறவர்கள் பக்கோடா சாப்பிடுகிறார் போல தான்!


Ramesh Sargam
மே 09, 2024 12:11

அமெரிக்காவில் கூட, இந்தியாவைப்போல வழக்குகள், குறிப்பாக அரசியல்வாதிகள் மீது உள்ள வழக்குகள் சீக்கிரம் முடிவுக்கு வருவதில்லை நீதிமன்றங்களின் செயல்பாடே சரியில்லை இப்படி இருந்தால் எப்படி?


Kasimani Baskaran
மே 09, 2024 06:49

அமெரிக்கர்களை பொருத்தமட்டில் லீலைகள் பெரிதல்ல அதை பொய் மூலம் மறைப்பதே பெரியதாக எடுத்துக்கொள்ளப்படும் "சத்யமேவ ஜெயதே" என்று சொல்லும் இந்தியாவில் கூட உண்மைக்கு மரியாதை கிடையாது - ஆனால் வெள்ளைக்காரர்கள் இன்னும் உண்மைகளை மதிப்பது சிறப்பு


Palanisamy Sekar
மே 09, 2024 05:47

அமெரிக்காவில் இது போல விசாரணை தெளிவாக நடக்கின்றது அதிலும் முன்னாள் அதிபர் என்றெல்லாம் பார்க்காமல் பத்திரிக்கைகளும் வெளியிடுகின்றன ஆனால் இங்கே பெங்களூரிலிருந்து வந்த தமிழ் நடிகை கதறினார், பேட்டியெல்லாம் கொடுத்தார், மிரட்டினார், ஆனால் இங்கே அவரை யாருமே கண்டுகொள்ளவே குறைந்தபட்சம் போலீஸ் கூட அந்த அரசியல்வாதி மீது நடவடிக்கையை மேற்கொள்ளவே இல்லை அதுவும் குற்றம் சாட்டிய நபர் இயக்குனர் நடிகர், போட்டோவெல்லாம் கூட காட்டி அழுத அந்த நடிகைக்கு யாருமே சப்போட் இல்லை ஜனநாயகத்தில் மிகசிறந்த இடத்தில அமேரிக்கா ஜொலிக்கின்றது தமிழகத்தில்?


J.V. Iyer
மே 09, 2024 04:02

அங்கு மக்கள் பணத்தை இவர் சுருட்டவில்லை அதெல்லாம் இங்குதான்% கமிஷன் சீக்கிரம் % க்கு ஏறப்போகுதாமே? க்கு பிறகு தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் எனவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் சின்னவருக்குத்தான் தமிழக சினிமா பழக்கம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை