உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 114 வயது மாரத்தான் ஜாம்பவான் பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!

114 வயது மாரத்தான் ஜாம்பவான் பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!

சண்டிகர்: பஞ்சாபில் 114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9xgaf0iu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.''பவுஜா சிங் முழு சீக்கிய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தார்'' என சீக்கிய சமூக மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

யார் இந்த பவுஜா சிங்?

* பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பியாஸ் பிண்டி கிராமத்தில் ஏப்ரல் 1ம் தேதி, 1911ம் ஆண்டு பவுஜா சிங் பிறந்தார். * இவர் தனது 89 வயதில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். * 2003ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டியில் 6 மணி நேரம் 2 நிமிடங்களில் இலக்கை அடைந்து 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் உலக சாதனை படைத்தார். * 2011ம் ஆண்டு தன்னுடைய 100வது வயதில், டொரோண்டோ வாட்டர்ப்ரண்ட் மாரத்தான் போட்டியை 8 மணி நேரம் 11 நிமிடங்கள் 6 வினாடிகளில் கடந்து அசத்தினார். * உலகின் முதல் 100 வயது நிரம்பிய மாரத்தான் 'ஜாம்பவான்' என்ற பெருமையை பெற்றார். * இவருக்கு 83 வயதில், அதாவது 1994ம் ஆண்டு இவரது 5வது மகன் குல்தீப் சிங் உயிரிழந்த பிறகு, மீண்டும் மாரத்தான் போட்டியில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பவுஜா சிங் தனது தனித்துவமாவ ஆளுமையாலும், உடற்பயிற்சி குறித்து இந்திய இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்தியவர். அவர் மன உறுதியுடன் கூடிய விளையாட்டு வீரர். அவரது மறைவால் நான் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

N Sekhar
ஜூலை 15, 2025 15:07

ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி


J. Vensuslaus
ஜூலை 15, 2025 11:51

ஆழ்ந்த இரங்கல்கள்


Subramanian
ஜூலை 15, 2025 11:37

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


VSMani
ஜூலை 15, 2025 10:54

இவர் 114 வயது வரை வாழ்வதற்கு என்ன உணவு பழக்கம் கொண்டார் என்ன உடற்பயிற்சி செய்தார் என்பது தெரிந்தால் நாமும் அதைக் கடைபிடிக்கலாம்.


Padmasridharan
ஜூலை 15, 2025 09:05

இப்பெல்லாம் நடக்கிறவங்கதான் சாகறாங்க. வேகமா போகுற வண்டிகளுக்கு கொடுக்கிற மரியாதை பாதசாரிகளுக்கு கொடுப்பதில்லை நடக்க பாதையுமில்லை. சிறு சிறு சந்து பொந்துகளில் கூட மிதிவண்டிகளுக்கோ நடப்பவர்களுக்கோ மரியாதை இல்லாமல் இருக்கிறது. வண்டிக்கு சொட்டை விழுந்தா சண்டை போடுறாங்க, மனுஷன அடிச்சு கொண்ணா பணத்த கொடுத்து மறைக்கறாங்க. .


Ganapathy Subramanian
ஜூலை 15, 2025 09:05

இந்திய ஒரு பெருமை சேர்க்கும் குடிமகனை இழந்துள்ளது. ஆழ்ந்த வருத்தங்கள்.


சமீபத்திய செய்தி