உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  மெக்சிகோ ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 100 பேர் காயம்

 மெக்சிகோ ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 100 பேர் காயம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பயணியர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்: வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஒக்சாகாவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. பசிபிக் பெருங்கடல் துறைமுகமான சலினா குரூஸ் முதல், கல்ப் ஆப் மெக்சிகோ துறைமுகமான கோட்ஸகோல்கோஸ் வரை, 'இன்டர்ஓசியானிக்' என்ற ரயில் செல்கிறது. நேற்று முன்தினம், 241 பயணியருடன் சென்ற அந்த ரயில், நிசாண்டா என்ற இடம் அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. வேகமாக சென்ற ரயில் வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்; காயமடைந்த 100 பேரில், ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ