உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கியில் படகு கவிழ்ந்து 14 அகதிகள் உயிரிழப்பு

துருக்கியில் படகு கவிழ்ந்து 14 அகதிகள் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அங்காரா: துருக்கியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏஜியன் கடல் பகுதியில் மூழ்கிய சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மூழ்கிய படகில் இருந்து தப்பிய ஒருவர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விபத்து தெரிய வந்தது. உடனடியாக மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களின் உடலைத் தேடும் பணி கடலோரக் காவல் படை படகுகள், நீச்சல் வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்து வருகிறது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானைச் சேர்ந்தவர்கள் துருக்கி வழியாக படகுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். அப்படி செல்லும்போது படைகள் மூழ்கி விபத்து ஏற்படுகிறது. இதில் பலர் இறந்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஆப்கான், சிரியா நாடுகளைச் சேர்ந்த 4,55,000 பேர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். இந்த ஆண்டு மட்டும் அக்டோபர் மாதம் வரையில் 1,22,000 பேர் அகதிகளாக வந்து சிக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை