உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / " என் குடும்பத்தில் 140 கோடி பேர் " - குவைத்தில் மோடி உரை

" என் குடும்பத்தில் 140 கோடி பேர் " - குவைத்தில் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத் சிட்டி: 'என் குடும்பத்தில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் நான் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும்' என குவைத்தில் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.மேற்காசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு, அவர் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். நம் விவசாயிகள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள், நமது தொழிலாளர்கள் வயல்களில் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்று நான் நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1xh0ary7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் எல்லாம் 10 மணி நேரம் உழைத்தால், நானும் 11 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் 11 மணி நேரம் வேலை செய்தால், நானும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன், என் குடும்பத்தில் 140 கோடி பேர் இருக்கிறார்கள், அதனால் நான் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர் மோடி!

குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டத்தில், தொழிலாளர் ஒருவர் நான் தமிழகத்தை சேர்ந்தவர் எனக் கூறியதும் பிரதமர் மோடி தமிழில், 'வணக்கம்' என கூறினார். இதற்கு, 'வணக்கம், தேங்க்யூ சார்...! என அந்த தொழிலாளர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
டிச 23, 2024 08:00

ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடணும் ஹை.. நிறைய வேலை இருக்கு ஹை.


Seekayyes
டிச 23, 2024 07:00

அந்த தூத்துக்குடி தமிழர் மோடி இந்தியில் பேசியதை கவனித்தீர்களா. திராவிடியா கட்சிகள், தூக்கு தூக்கி காங்கிரஸ், நாம் டுமிலர்ஸ் போன்றோர். தமிழ் அவசியம் கற்க வேண்டும் தமிழ்நாட்டில் சிறப்பாக வாழ, ஆனால் அண்டை மாநிலத்திலோ, வெளிநாட்டில் நம் நாட்டாரோடு ஒன்றாக வாழ "இந்தி" அவசியம் கற்க வேண்டும்.


Narayanan Muthu
டிச 22, 2024 20:16

140 கோடி பேரையும் கூப்பிட்டு கேட்டால் தெரியும் அவர்களில் எத்தனை சதவீதம் பேர் இதில் அடக்கம் என்று. 30 சதவீதம் கூட தேறாது.


Bala
டிச 22, 2024 21:32

நீ விரும்பாவிட்டாலும் பிரதமர் மோடி அவர்கள் உமக்கும் சேர்த்துதான் உழைக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த திரு மோடி அவர்கள் நமக்காக உழைக்காமல், இத்தாலி சோனியாவா உழைக்கப்போகிறார்கள்? அல்லது தமிழக திராவிட கொள்ளையர்களா?


Senthoora
டிச 22, 2024 16:30

இவரை பிடிக்காமல், கோபத்தில் போனவங்க இந்த 140 பேரும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 13:57

தேங்க்யூ சார் ..... என்று தமிழில் சொன்னான் பெருமைமிகு தமிழன் .... திராவிடத்தின் வளர்ப்பு ..... சமச்சீரின் தாலாட்டு ....


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 20:58

Very good. நாம பேசறது கேக்கறவருக்குப் புரியணும் னா அவருக்கும் தெரிந்த மொழியில் பதில் பேசணும். அதனால் தான் அந்த திராவிட வளர்ப்பு மகன், சமச்சீரின் தாலாட்டில் நாகரிகம் கற்றவன் சொன்னார். நன்றி அய்யா என்று சொல்லியிருந்தால் பிரதமருக்கு புரிந்திருக்காது. Thank you sir என்றதால்தான் புன்னகைத்தார்.


Sampath Kumar
டிச 22, 2024 12:31

யார் அந்த வசன கர்த்தா நல்ல சொல்லி கொடுத்து கீறற்பா


ghee
டிச 22, 2024 14:21

துண்டு சீட்டு இல்லாம படிப்பார்...அங்கிட்டு எப்படி


Duruvesan
டிச 22, 2024 12:27

உலக மகா நடிப்புடா சாமி


Narayanan Muthu
டிச 22, 2024 20:12

teleprompter thaan


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 12:26

மேலிருந்து கீழ் வரை பாஜக பூரா காமெடி பண்ணுகிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 13:58

திராவிடம் எழுபதாண்டுகளாக செய்தது அதே காமெடிதான் ....


ghee
டிச 22, 2024 14:15

அப்படியா.... அப்போ சட்டையை கிலிசிட்டு வந்ததும் சூப்பர் காமெடி தானே


ghee
டிச 22, 2024 16:18

உன் பெயரை right to left படித்தால் நீ யாரென்று தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை