உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உதவி தேடிய பாலஸ்தீனியர்கள் 1760 பேர் கொல்லப்பட்டனர்: ஐநா அறிக்கை

உதவி தேடிய பாலஸ்தீனியர்கள் 1760 பேர் கொல்லப்பட்டனர்: ஐநா அறிக்கை

நியூயார்க்: மே மாதத்திலிருந்து காசாவில் உதவி தேடிய 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டனர் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023ல் போர் துவங்கியது. காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, உள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களில் 61,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.சமீபத்தில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பிரபல நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மே மாதத்திலிருந்து காசாவில் உதவி தேடிய 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டனர். பெரும்பாலானோர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர். கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர். இதில் உதவிக்காக காத்திருந்த 12 பேர் அடங்குவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 16, 2025 20:28

மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டதால்தான் உலகெங்கிலும் போர், வெள்ளம், தீ என்று பலவித பிரச்சினைகள்.


joe
ஆக 16, 2025 19:53

இந்த அழிவுக்கும் அதிபர் டிரம்ப்பும் ஒரு முக்கியமான குற்றவாளிதான் .......இது 100% உண்மைதான் என்றால் மறுக்கமுடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை