உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம்: 18 ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம்: 18 ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனவரி மாதம் 20 ல் பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன் எனக்கூறியுள்ளார். இதனையே தேர்தல் பிரசாரத்தின் போதும் கூறியிருந்தார்.இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்த முதற்கட்ட பட்டியலை அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். இப்பட்டியலில் மொத்தம் 15 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் 17,940 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் ஹோண்டுரஸ் உள்ளது. இந்நாட்டைசை சேர்ந்த 2,61,651 பேர் வெளியேற்றப்பட உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் கவுதமாலா, மெக்சிகோ, எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களின் பட்டியலில் மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். நம் நாட்டை சேர்ந்த 7,25,000 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இதனிடையே, அமெரிக்காவில் குடியுரிமை கேட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், இவை நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக 90 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று பிடிபட்டு வருகின்றனர்.நாடு கடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசு தயாரித்த பட்டியலில், இந்தியாவை ஒத்துழைப்பு வழங்காதவர்கள் பட்டியலில் வைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jay
டிச 14, 2024 18:23

உலக நாடுகளில் வாய்ப்புகள் கொட்டி கிடப்பது தற்போது இந்தியாவில் தான். சிந்தித்து செயல்பட்டால் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது. சிந்திப்பதற்கும் கடின உழைப்பிற்கும் சோம்பல் பட்டு பண மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் சென்று கூலி வேலை செய்து பிழைக்க நினைப்பவர்களை என்ன சொல்வது?


venugopal s
டிச 14, 2024 11:05

அந்த பதினெட்டாயிரம் இந்தியர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் என்ற உண்மையை சொல்லி இருக்கலாமே!


அப்பாவி
டிச 14, 2024 10:30

சீக்கிரம் பைடன் கிட்டே சொல்லுங்க. பொது மன்னாப்பு வழங்கி குடியுரிமையும் குடுத்திருவாரு.


இந்தியன்
டிச 14, 2024 04:26

கள்ளத்தனமாக குடியேறி இந்தியாவுக்கு தலைகுனிவை உண்டாக்கும் இப்படிப்பட்டவர்களை கண்டிப்பாக உடனடியாக வெளியேற்ற வேண்டும்.


Jayaraman Sekar
டிச 13, 2024 20:24

இதில் என்ன தவறு உள்ளது???? இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய பங்களா தேஷிகளால் நமக்கு எவ்வளவு பிரச்சனகள்???? கள்ளத்தன குடியேற்றம் எந்த நாட்டுக்குமே பிரச்சனைதான்.. நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்...


Matt P
டிச 13, 2024 20:16

படித்தவர்களாக இருந்தால் அமெரிக்கா தான் வேண்டும் என்று அடம் பிடிக்கணும். அமெரிக்காவில் சட்ட விரோதமாக இருக்கும் அதிகமான இந்தியர்கள் படித்தவர்கள் தான். மெக்ஸிகோ ஹோண்டுராஸ் போன்ற பின் தங்கிய நாடுகளில் படிப்பு இன்மை குடும்ப சூழ்நிலை பக்கத்து நாடு என்று வந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக முன்னேற முயற்சிக்க வேண்டும். தொழில் நுட்பம் முன்னேறிய பிறகு எவ்வளவோ வாய்ப்புகள். இந்தியாவில் இருந்து கொண்டே படிப்பு இல்லாவிட்டால் கூட இணையதளத்தில் எளிதில் பணம் சம்பாதிப்பதாக தெரிகிறது. 18 ஆயிரம் இந்தியர்களையும் எளிதில் வெளியேற்றி விட முடியாமலும் இருக்கலாம். தப்பிக்கவும் முடியலாம். சட்டம் விரோதம் என்றாலும் கூட பலர் வெளியேறும்போது பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.


rama adhavan
டிச 13, 2024 19:12

கண்டிப்பாக வெளியேற்றப்பட வேண்டும். சட்ட விரோதமாக இந்தியாவில் வந்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, கென்யா குடிமக்களளை நாமுந்தான் வெளியேற்றுகிறோம்.


Kasimani Baskaran
டிச 13, 2024 19:09

யாருக்கும் கொம்பு முளைக்கவில்லை. ஆகவே கள்ளத்தனமாக குடியேறினால் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.


அப்பாவி
டிச 13, 2024 18:56

இங்கியே 15 லட்சமும், ரெண்டு கோடி வேலையும் கிடைக்குதே. அமெரிக்காவில் இதை விட சொகுசு வாழ்க்கை இருக்கா


rama adhavan
டிச 13, 2024 20:44

உண்மையேலேயே அப்பாவி தான். இந்தியர்கள் மட்டுமல்ல. சீனா, கனடா, தென் கொரியா, இங்கிலாண்டு, அரபு போன்ற முன்னேறிய நாடுகள் உட்பட 110 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். அங்கெல்லாம் வேலை இல்லையா? எனவே வெறுப்பில் கருத்து எழுத கூடாது. எதையும் நன்கு படிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை