உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்

அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜிம்மில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். நெவடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் செயல்பட்டு வரும் ஜிம்மில், வழக்கம் போல சிலர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். மேலும, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளதால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
மே 18, 2025 19:11

எந்துக்கு உந்நாவு ட்ரம்பு


என்றும் இந்தியன்
மே 18, 2025 19:08

வெறும் 2 பேரா??? அதான் இப்போ அமெரிக்காவில் வீதிக்கு வீதி இப்போது சுடுதல் கொலை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது??கீழே பாருங்கள் அமெரிக்கா எந்த அளவுக்கு கேவலநிலையில் இருக்கின்றது என்று தினம் ஒரு கொலை ஒரு மாகாணத்தில் சர்வசாதாரணமாக உள்ளது . Total number of homicides in the United States in 2023, by state California:1,929 Texas:1,845 Florida:1,066 Pennsylvania:861 North Carolina:855 Illinois:823 Georgia782 Tennessee703 Louisiana:663 Ohio:639 New York:595 Michigan:591 Missouri564 Alabama524 Virginia520 Maryland:515 South Carolina:482 Arizona:442 Indiana:386 Washington:373 Colorado:314 Arkansas:289 Wisconsin:283 Kentucky:275 District of Columbia:265 New Jersey:264 Oklahoma:247 New Mexico:244 Nevada:218 Mississippi204 Oregon:189 Minnesota180 Massachusetts:146 Kansas:136 Connecticut:135 West Virginia:87 Iowa:79 Utah68 Nebraska:64 Alaska:62 Maine:60 Delaware:46 Idaho:46 Montana:32 Rhode Island:28 South Dakota27 New Hampshire:26 North Dakota:26 Hawai:20 Wyoming18 Vermont:16


Ramesh Sargam
மே 18, 2025 12:39

நீர் முதல்முறை அதிபர் பதவி வகித்தபோதும் ஏமி செய்யலேது. இப்ப இரண்டாவது முறை பதவியில் இருக்கும்போதும் ஏமி செய்யலேது - இந்த அவலத்தை தடுக்க. நூவு எந்தக்கையா பதவியில் உன்னாரு?


Suresh Velan
மே 18, 2025 10:24

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றனர் என்பது போல் சட்டு புட்டு என்று கேஸை முடிக்கணும் , இங்க இந்தியாவில் பாரு அண்ணா பல்கலைக்கழத்தில் குற்றவாளி ஞானசேகரனுக்கு பிரியாணி சாப்பாடு போட்டு , வருடக்கணக்கில் அவன் பின்னாடி யார் யார் , அந்த சார் யார் யார் கேஸை வருஷ கணக்கில் இழுத்துகிட்டே போவது , இந்திய தலையெழுத்து, அமெரிக்க காரனை பார்த்து கத்துக்கோங்க .


naranam
மே 18, 2025 09:06

அங்கு சுட்டுக் கொல்கிறார்கள்.. இங்கு சுடாமலும் கொல்கிறார்கள்..


muralidaran ms
மே 18, 2025 08:31

தொழில் முன்னேற்றம் அதான் துப்பாக்கி


சண்முகம்
மே 18, 2025 08:26

நம்மூர்ல அருவாள். அமெரிக்காவில் துப்பாக்கி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை