உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாழும் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு

வாழும் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில், சிறுமியரை அம்மனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. நேபாளத்தின் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, பல கட்ட சோதனைகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கின்றனர். சிறுமியின் உடல், மன வலிமையை சோதித்து அவர் கன்னி தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிந்துக்கள், புத்த மதத்தினரால் வழிபடப்படுகிறார். பருவம் எய்தும் வரை அச்சிறுமியை கன்னி தெய்வமாக கருதி பூஜிக்கின்றனர். அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயதானதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார். அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, அங்குள்ள மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார். குமாரியாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமியர், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். பண்டிகைகளுக்காக ஆண்டில் சில முறை மட்டுமே வெளியே அனுப்பப்படுவர். பருவம் எய்திய பின் அவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதிலும், இயல்பான வாழ்க்கையை வாழ்வதிலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குமாரிகள் இப்போது அரண்மனைக்குள் கல்வி கற்கவும், டிவி பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற குமாரிகளுக்கு அரசு ஒரு சிறிய மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சண்முகம்
அக் 02, 2025 05:59

இந்த குழந்தை பருவமடையும் வரை தான் தெய்வம். அதன் பின் வாழ் நாள் முழுவதும் கன்னியாக வாழ வேண்டும்.


Bhaskaran
அக் 02, 2025 05:32

குமாரி காவு என்றஒரு நாவலில்இவர்களை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது


Prabhu Balasubramaniam
அக் 01, 2025 13:37

கொடுமை


நிக்கோல்தாம்சன்
அக் 01, 2025 10:48

படிக்கவே சங்கடமா இருக்கு


Kalyanaraman
அக் 01, 2025 08:53

கன்னியாகுமரி, சித்தர்கள் மரபில் வணங்கப்படும் பத்து வயதிற்குட்பட்ட பெண் தெய்வம் வாலைத் தாய்.


மாபாதகன்
அக் 01, 2025 09:35

இது அந்த இரண்டே வயதான பச்சிளம் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியுமா?? எல்லா குழைந்தைகளும் தெய்வமே? குற்றங்களை மன்னிக்கிற குணத்தால் மனத்தால் ஒன்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை