உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது இரு நாடுகளும் 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cwoixtpo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என ஆப்கன் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆப்கன் படையினர் தீவிர காட்டி வருகின்றனர். கொல்லப்பட்ட 10 பேரில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர். இவர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என்பது தெரியவந்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sudha
அக் 18, 2025 18:26

இரு நாடுகளையும் இந்தியா வசமாக்கி இங்குள்ள முஸ்லிம்களை அங்கெல்லாம் குடியமர்த்தலாம் . நாஸ்ட்ரடாமஸ் தீர்க்க தரிசனத்தில் இது இருக்கிறது


lana
அக் 18, 2025 17:24

எங்கப்பா இஸ்ரேல் தாக்குதல் க்கு கூவிய போராளிகள். சீக்கிரம் வாங்க


M. PALANIAPPAN, KERALA
அக் 18, 2025 15:16

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டவில்லை . ஆப்கானிஸ்தான் எடுத்தது நல்ல முடிவு


RAMESH KUMAR R V
அக் 18, 2025 12:33

இவர்களின் அட்டூழியம் சீக்ரம் முடிவுக்குவரும்.


Kumar Kumzi
அக் 18, 2025 12:08

அணைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து பாக்கிஸ்தானை ஒழித்து கட்டணும்


Rathna
அக் 18, 2025 11:58

டிசய்னே அப்படி.


HoneyBee
அக் 18, 2025 11:19

சீக்கிரம் பாகிஸ்தான் கதையை ஆப்கானிஸ்தான் நண்பர்கள் முடித்து வைப்பார்கள்


RAJ
அக் 18, 2025 11:15

பக்கிஸ்தானை அழிக்கவேண்டாம்... தானாகவே அழியும்..


S SRINIVASAN
அக் 18, 2025 11:13

give three or four agni missiles to Afghan let them rejoice indian innovation


rasaa
அக் 18, 2025 10:53

அமெரிக்காவின் அழுத்தம்


சமீபத்திய செய்தி