வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அண்ணே,அண்ணே, ட்ரம்ப் அண்ணே, எதுஎதற்க்கெல்லாமோ திடீர் திடீர் என்று முடிவு எடுக்கிறீர்கள். ஆனால் காலம் காலமாக நடக்கும், இந்த துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு உங்களால் ஒரு நிரந்தர முடிவு காணமுடியவில்லையே அண்ணே. மற்ற நாட்டவர்கள் விஷயங்களில் தலையிடும் நீங்கள், உங்கள் நாட்டில் இப்படி அடிக்கடி நடக்கும் பிரச்சினைக்கு முடிவு காண மாட்டீர்களா அண்ணே ? முன்பு நீங்கள் அதிபராக இருந்தபோதும் துப்பாக்கி சூடு பிரச்சினை இருந்தது. அப்பொழுதும் அண்ணே, நீங்கள் எந்த முடிவும் எடுத்து இந்த அவலத்தை தடுத்துநிறுத்தவில்லை. மீண்டும் இப்பொழுது அதிபர் பதவியில் உள்ளீர்கள். இப்பொழுதாவது ஏதாவது நடவடிக்கை எடுத்து இந்த அவலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்களா அண்ணே