உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தம்; எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் இருக்காது என ரஷ்யா உறுதி

உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்தம்; எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் இருக்காது என ரஷ்யா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை, 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=344guw53&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபராக பொறுப்பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஆனால் முடிவை அறிவிக்கவில்லை.அது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் நேற்று பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு முடிவில், இரு நாடுகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதன்படி உக்ரைன் நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்' என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இத்துடன் இரு நாடுகளும் தலா 175 போர் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளன. தங்கள் வசம் உள்ள பலத்த காயம் அடைந்த உக்ரேனிய போர் வீரர்கள் 23 பேரை நல்லெண்ண நடவடிக்கையாக அந்த நாட்டிடம் ஒப்படைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை மத்திய கிழக்கு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
மார் 19, 2025 12:49

நல்ல நண்பர்கள் என்பதை ரஷ்சியாவின் புடின் அவர்களும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களும் நிருபித்திருக்கிறார்கள். நம் இந்திய பிரதமரும் ஸஃஅமதநதியென விரும்புகிறார். உலக போர் வரமால் தடுத்திருக்கிறார்கள் இது எல்லா நாட்டிற்கும் நிம்மதியை அளிக்கும். நமக்கும் நிம்மதியளிக்கும் உலக தலைவர்களில் இம் மூவரும் வரவேற்க தக்கவர்கள்.


Anand
மார் 19, 2025 10:39

எப்படி பார்த்தாலும் உக்ரைனுக்கு பலத்த நட்டம்...


சண்முகம்
மார் 19, 2025 10:21

முழு போர் நிறுத்தம் கிடையாது. இதற்கிடையில் முழுமையாக போர் நிறுத்தம் செய்ய புடினின் பல புதிய நிபந்தனைகளால் ட்ரம்பிற்கு தலைவலி. புடினா கொக்கா?