உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு அவசியம்: நிக்கி ஹாலே

சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு அவசியம்: நிக்கி ஹாலே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்'' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான பொருட்களுக்கு மீது 25 சதவீத வரியும், 25 சதவீத அபராத வரியும் அதிபர் டிரம்ப் விதித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவை சேர்ந்த பல பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அந்த வகையில் அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பிற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலேவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர், முதல் முறை அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றியவர்.இது குறித்து நிக்கி ஹாலே கூறியதாவது: இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது.சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம். இந்தியா டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வு காண அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்.இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை. ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனில் இந்தியா சிறந்து விளங்குகிறது. எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும். இவ்வாறு நிக்கி ஹாலே கூறியுள்ளார். டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த நிக்கி ஹாலே, ''அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு மிக அவசியம்'' என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஆக 21, 2025 20:54

அமெரிக்க அதிபர் டிரம்பு தனது தலையில் போட்டுக்கொண்டிருக்கும் சிகப்பு நிற தொப்பியில் மேட் இன் சைனா என்று இருப்பதை அவரே இன்னும் அறியவில்லைபோலும் சீனாவை தானே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு உலகிலேயே மிக பெரிய ஜனநாயக இந்தியாவிற்கு சங்கடங்கள் கொடுப்பது டிரம்ப்பின் அறியாமையும் அரசியல் வீழ்ச்சியைம் தான் காண்பிக்கிறது


பா மாதவன்
ஆக 21, 2025 19:52

நம் பாரதத்தை வெறுப்பு ஏற்ற, பக்கத்து எதிரி நாடு பாகிஸ்தானுக்கு விருந்து வைத்து புகழ்ந்து பேசி வரும் டிரம்ப், பிட் காயின், கிரிப்டோ கரன்சி துறையில் சிறந்த வியாபாரியாக செயல்பட்டாலும், தற்போது முற்றிய மன நோயாளியாக தான் தெரிகிறார்.அமெரிக்க முன்னேற்றம் மேலும் தடை படக் கூடாது எனில், நிக்கி ஹாலே ஒருவர் மட்டுமல்ல இது போல் பல தலைவர்கள் சேர்ந்து டிரம்ப் தலையில் வேப்பிலை அடித்து அவருக்கு புத்தி புகட்ட வேண்டும். வேப்பிலை சரிப்பட வில்லை எனில், இருக்கவோ இருக்கு சாட்டை. அதை சுற்றலாம்


தாமரை மலர்கிறது
ஆக 21, 2025 19:36

டிரம்புக்கு ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது. ஒருபோதும் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை சரிசமமாக கருதாது. சீனாவுடன் சேர்ந்து , டாலருக்கு இந்தியா வேட்டு வைத்தால் தான் புரியும்.


Sundar R
ஆக 21, 2025 15:32

நிக்கி ஹாலீ போன்று உஷா வேன்ஸ், கமலா ஹாரீஸ், காஷ்யப் படேல், துளசி ஹெப்பார்டு, விவேக் ராமசாமி ஆகியோர் டிரம்புடன் பேசி இந்திய உறவை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.


KavikumarRam
ஆக 21, 2025 18:55

என்னது கமலா ஹாரிஸா. அந்தம்மா இந்தியாவுக்கு ஆதரவா எதுவுமே பண்ணினதில்லை. இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட அவரா இந்தியன். அது நம்மூரு ராகுல், சுடாலின், மம்தா மாதிரி.


ஆரூர் ரங்
ஆக 21, 2025 14:44

வரவர ஜெலன்ஸ்கிக்கும் டிரம்புக்கும் வித்தியாசம் தெரியமாட்டேங்குது.


Ramesh Sargam
ஆக 21, 2025 14:38

நிக்கிக்கு புரிந்ததுகூட டிரம்புக்கு புரியலையே


Kumar Kumzi
ஆக 21, 2025 14:30

சீனாவை வளர்ச்சியடைய விட்டு சீனாவிடம் உதைபட அமெரிக்கா தலைவர்கள் முடிவு பண்ணிவிட்டார்கள்


SP
ஆக 21, 2025 14:14

பொதுவாகவே அமெரிக்க குடியரசு கட்சி இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஆனால் இந்த டிரம்பர் மட்டும் தான் இப்படி அழிச்சாட்டியம்செய்கிறார்


vinu
ஆக 21, 2025 14:13

என்னது, இந்திய கடும் கண்டனம் தெரிவித்ததா? சொல்லவை ல்லை .


vivek
ஆக 21, 2025 15:17

ஏன் வினு நீ கோமாவில் இருந்தாயா


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 21, 2025 15:56

என்ன உபி எரியுது? ரஷியன் ஆயில் கிடைக்கும் வாங்கி தடவு


Raman
ஆக 21, 2025 19:02

Mr Vinu You seems to be lost in local news...typical local attitude.. LKG stuff to put it in nutshell..


Anand
ஆக 21, 2025 14:01

குடிகாரனைவிட கேவலமான ட்ரம்ப் செய்த அயோக்கியத்தனத்தால் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு இந்தியாவின் உறவு அவசியம் என்கிற நிலை மாறி அமெரிக்காவை எதிர்கொள்ள சீனாவிற்கு இந்தியாவின் உறவு அவசியம் என்றாகியுள்ளது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை