உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்"; ரஷ்ய மக்களுக்கு புடின் வலியுறுத்தல்

"அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்"; ரஷ்ய மக்களுக்கு புடின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. உக்ரைன் நாட்டுடனான போரால் ரஷ்யாவிலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குழந்தை இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்துவிடும். ஒரு நாடு வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

A1Suresh
பிப் 17, 2024 13:59

யஜுர்வேதத்தின் ஒரு பாடலை மேற்கோள் காட்டுகிறேன். "ப்ரஜா ச ஸ்வாத்யாய ப்ரவசனேச | ப்ரஜனஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனேச | ப்ரஜாதிஸ்ச ஸ்வாத்யாய ப்ரவசனேச " இதன் பொருளாவது தானும் வேதங்களை ஓதி, ஹோமங்களை செய்தல் வேண்டும். தனது காலத்திற்குப் பிறகு அவைகளை நடத்தவேண்டி பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வேதமோதல், ஹோமசடங்குகளை தொடர்ந்து செய்விக்க வேண்டும். அப்படியே பேரன்-பேத்திகளை உண்டுபண்ணி இந்த சந்ததி அறுபடாமல் காக்கவேண்டும். அதுபோல மாண்புமிகு ரஷ்ய அதிபர் தமது ரஷ்ய கலாசார-மொழி-கலை இலக்கியங்களை காக்க சந்ததிகளை உருவாக்க சொல்கிறார்.


S.F. Nadar
பிப் 17, 2024 13:31

வட மாநிலங்களில் ....... மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ...தென் மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டு படுத்திவிட்டாராகல் .......


P Karthikeyan
பிப் 17, 2024 11:19

தமிழன் யாராவது இருக்கீங்களா


Indian
பிப் 17, 2024 09:21

ரஷ்ய தம்பதிகளை ஆறு மாதங்களுக்கு இந்தியா அல்லது சீனாவுக்கு அனுப்பி வையுங்கள் உங்கள் நாட்டு மக்கள் தொகை பெருகும் ....


Seshan Thirumaliruncholai
பிப் 17, 2024 09:03

மக்கள் செல்வம் நாட்டு வளம் மட்டுமல்ல. குடும்ப நலனும் உள்ளடக்கியது. ஹிந்து மதம் தவிரஇதர மதங்கள் இதரமதங்கள் மதங்கள் மக்கள் வளத்தை கட்டுப்படுத் துவதில்லை மகிழ்ச்சிதான் குடும்பம். இப்போது இல்லை. முன்பு தேவையுள்ள வசதிகள் பெற்றோம். மகிழ்ந்தோம். இப்போது தேவையற்ற வசதிகளுக்கு ஆசைபட்டு இயற்க்கை முரணான குடும்ப கட்டுப்பாட்டை அணுகிறோம் குழந்தை வளம் இருந்தால் நாட்டு பாதுகாப்புக்கு கொடுப்போம்.


பேசும் தமிழன்
பிப் 17, 2024 08:30

உங்களுக்கு என்ன மக்கள் தொகை கூட வேண்டும் அவ்வளவு தானே...... ரோஹிங்கியா....அமைதி மார்க்க ஆட்களை உங்கள் நாட்டின் உள்ளே அனுமதித்தால் போதும் ....வத வத வென பிள்ளைகளை பெற்று.... கொஞ்ச நாட்களில் உங்களை மைனாரிட்டி ஆக்கி விடுவார்கள்.....என்ன ஒண்ணு எண்ணிகை கூடியவுடன் தனி நாடு கேட்பார்கள்..... அவ்வளவு தான் !!!!


Kasimani Baskaran
பிப் 17, 2024 08:08

இங்குள்ள கம்மிகளை அங்கு எஃஸ்போர்ட் செய்யலாம். அங்குள்ள அடக்குமுறையை உணர்வதற்குள் கதையையே முடித்து விடுவார்கள் என்பது உண்டியல் கோஷ்டிக்கு புரியும் ஆனால் புரியாதது போல மகா உருட்டு உருட்டுவார்கள்.


Ramesh Sargam
பிப் 17, 2024 07:58

ஒருவேளை ரஷ்யா ராணுவத்தில் ஆள் (வீரர்கள் எண்ணிக்கை) குறைந்திருக்கலாம். தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டுடன் போரிட்டால் வீரர்கள் எண்ணிக்கை குறையாமல், கூடுமா?


Ramesh Sargam
பிப் 17, 2024 07:56

.... அல்லது இந்தியாவிலிருந்து தத்தெடுத்துக்கொள்ளுங்கள்.


Barakat Ali
பிப் 17, 2024 08:35

எதற்காக ???? தங்கள் மீது புடின் போன்ற சர்வாதிகாரிகளால் திணிக்கப்படும் போரில் மரணமடையவா ????


Ramesh Sargam
பிப் 17, 2024 08:42

அப்படி இல்லை அண்ணா, இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். பலர் சாப்பாட்டிற்கே சங்கடம். அவர்கள் தத்தெடுத்தால் அங்கேயாவது பிழைத்துப்போவார்கள் என்கிற நல்ல எண்ணத்தில் கூறினேன். அதைப்போய் பெறுதி படுத்தி... இந்த தத்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு பேச்சுக்கு, தமாஷுக்கு கூறினேன். அதைப்போய் பெறுதி படுத்தி...


Barakat Ali
பிப் 17, 2024 11:39

நானும் சாதாரணமாகவே கேட்டேன் ..... வெறுப்புணர்வுடன் அல்லது கோபத்துடன் அல்ல ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை