உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!

காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார் என ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: ரஷ்ய அதிபர் புடின் நன்றாக பேசிவிட்டு பின் அனைவர் மீதும் குண்டு வீசுகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9slq2k2s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உக்ரைனுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். புடின் உண்மையிலேயே பலரை ஆச்சரியப்படுத்தினார். அவர் நன்றாகப் பேசுகிறார், பின்னர் மாலையில் அனைவரையும் தாக்குகிறார். அவர் [புடின்] தான் சொன்னதை புரிந்து கொள்வார் என்று நான் நினைத்தேன். அவர் இரவில் அனைவரையும் குண்டுவீசித் தாக்கி வருவது எங்களுக்கு பிடிக்கவில்லை. இதுவரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற போது உக்ரைன்- ரஷ்யா இடையே நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார். ஆனாலும் போர் தொடர்ந்து நிலவி வருவதால், ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூலை 14, 2025 18:22

அது வேற வாயி


M Ramachandran
ஜூலை 14, 2025 16:25

முதலில் விஷமக்கார ஜெலன்ஸக்கியை உஙகள் இருப்பின் உணின் மற்றும் ஐக்கிய இங்கிலாந்து தூண்டிவிட்டு ரஷ்யாவுடன் ஆனா போரை முடிவுக்கு கட்டு படுத்த முயற்சிய்ய செய்யுங்ங்கள்


N.Purushothaman
ஜூலை 14, 2025 14:25

உக்ரைனில் பூந்து கனிமங்களை ஆட்டையை போடவும் ,இடிபாடுகளை அகற்றி அங்கு கட்டுமானங்களை கட்டி தருகிறோம்ன்னு சொல்லி அதை தனது நிறுவனத்திற்கு மடை மாற்றுவதை அவர் தெரிஞ்கிட்டார் ....


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 16:46

இரண்டு பெரியண்ணன் நாடுகளுக்கும் அந்த எண்ணம்தான். நேரு,இந்திரா காலத்துல ரஷ்யா ( USSR)இந்தியாவைக் கொள்ளையடித்த வரலாறு தெரியுமா?


V K
ஜூலை 14, 2025 13:36

எங்க ஊரில் மதியம் 12 மணிக்கு அப்படி பேச அரபிப்பாங்க அவுங்க ஊரில் மாலை போல் இருக்கு சரி விடு


Ramesh Sargam
ஜூலை 14, 2025 12:27

ஒருவேளை புடின் அவர்கள் dementia என்கிற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ... டிமென்ஷியா என்பது அறிவாற்றல் செயல்பாட்டில் ஏற்படும் ஒரு நோயாகும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 14, 2025 12:16

போரை நிறுத்த என்ன செய்தார் என்று சொல்லமுடியுமா , லாபம் என்று ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு தான் முயற்சிதார். இந்த விற்பனையாளர்