உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை": இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

"போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை": இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

ஜெருசலேம்: 'ஹமாஸ் உடன் நடந்து வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் என்பது உறுதியாகிவிட்டது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த அக்., 7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் போர் 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்கவும், போர் நிறுத்தத்தை கொண்டு வரவும் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.அப்போது நிரந்த போர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஹமாஸ் அமைப்பினர் முன் வைத்தனர். இதனை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியதாவது: பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது. பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் அரசு தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். ஹமாஸ் உடன் நடந்து வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை. ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது.அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.V. Iyer
பிப் 19, 2024 06:00

அய்யா, அப்படியே இங்கும் வந்து கொஞ்சம் களைஎடுப்பீர்களா? நிறைய தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.


தாமரை மலர்கிறது
பிப் 18, 2024 21:24

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. கடைசி பயங்கரவாதியை அழிக்கும்வரை, இஸ்ரேல் போர் நடத்த உலகநாடுகள் உதவேண்டும். இன்னும் பத்தாண்டுகளுக்கு போர் நடப்பதை தவிர்க்கமுடியாது. உலகநாடுகள் இஸ்ரேலுக்கு பணஉதவி செய்ய வேண்டும். இந்தியா முதல்கட்டமாக பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து உதவவேண்டும்.


Kalyan Singapore
பிப் 18, 2024 19:39

காசா மக்கள் கடவுளை நம்பாமல் ஹமாஸுக்கு ஆதரவு அளித்ததால் வந்த வினை தான் இது. ஹமாஸ் அழியும் வரை இஸ்ரேல் போரை நிறுத்தாது. பாலஸ்தீன மக்கள் ஹமாஸுக்கு எதிராக திரும்பினாள் போர் விரைவாக முடிவுற்று அமைதியும் திரும்பும். . பாலஸ்தீனிய மக்கள் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலை ஆதரிப்பார்களா? சந்தேகமே


K.Muthuraj
பிப் 18, 2024 20:12

தமிழர்களால் எங்ஙனம் திராவிட சித்தாந்தம் (?) மீறி சிந்திக்கமுடியதோ அதே போல் காசா பகுதி மக்களால் ஹமாஸ் சித்தாந்தங்கள் மீறி சிந்திக்க முடியாது. திராவிடம் ஹிந்தி எதிர்ப்பை மையமாய் வைத்து பிழைப்பை நடத்துவது போன்று ஹமாஸ் தன மக்களின் இஸ்ரேலிய எதிர்ப்பை மையமாய் வைத்து பிழைப்பு நடத்துகின்றது. ஹமாஸ் தவிர வேறு அரசியல் அமைப்புகளே அங்கு இல்லை. ஹமாஸ் மக்களால் வேறு நாடுகளை ஹமாஸ் இன்றி தொடர்பு கொள்ள இயலாது. இதுவே போரின் தொடர்ச்சிக்கு காரணம்.


Pandi Muni
பிப் 18, 2024 19:06

கடைசி மூர்க்கன் மடியும் வரை இஸ்ரேல் போரை தொடரவேண்டும்.


வெகுளி
பிப் 18, 2024 17:22

காசா பகுதியில் உள்ள மக்களுக்கு அருகிலுள்ள இசுலாமிய நாடுகள் குடியுரிமை குடுத்து அழைத்து சென்று விட்டால் இந்த போர் தானாகவே நின்று விடும்...


sivaprakash
பிப் 18, 2024 17:21

போர் நிறுத்தம் எப்பொழுது வரும்.. கடவுள் தான் மக்களை காப்பற்ற வேண்டும்.


பேசும் தமிழன்
பிப் 18, 2024 19:08

சும்மா இருந்த இஸ்ரேல் நாட்டை சொரிந்து விட்டு விட்டார்கள் .... ஹமாஸ் பயங்கரவாதிகள் ....இப்போது பதிலடி கொடுக்கும் போது குத்துதே.... குடையுதே என்றால் எப்படி ??? கடைசி தீவிரவாதி சாகும் வரை...தாக்குதலை நிறுத்த கூடாது .


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை