உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி

இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ''இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்'' என சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் சுதந்திர தினத்தன்று வாழ்த்துக்கள் தெரிவித்த மோடிக்கு நன்றி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fhs341e5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது, ​​முழு உலகமும் இந்த கொடூரமான போரை கண்ணியத்துடனும் நீடித்த அமைதியுடனும் முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுகையில், இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நம்புகிறோம்.ராஜதந்திரத்தை வலுப்படுத்தும் ஒவ்வொரு முடிவும் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பாலும் சிறந்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஆக 26, 2025 19:24

நீ நம்பினால் என்ன.... நம்பாவிட்டால் என்ன.... எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் எக்கேடு கெட்டால்..... எங்களுக்கென்ன !!!


Anvar
ஆக 26, 2025 17:14

வரலாறு மாறாது இந்தியாவுக்கு எதிராக ஓட்டு போட்டதெல்லாம் இந்தியா மறக்காது சலன்ஸ்கி


அப்பாவி
ஆக 26, 2025 12:22

உன்கிட்டே ஆயில் இருக்கா? ஏவுகணை இருக்கா?


Artist
ஆக 26, 2025 11:59

மோதியை நம்பறதுக்கு தளபதியை நம்பியிருக்கலாம்


N Sasikumar Yadhav
ஆக 26, 2025 18:39

ஆம் தளபேதிதான் நேரடியாக உக்ரைனுக்கு பேருந்து விட்ட உத்தமர்


மூர்க்கன்
ஆக 26, 2025 09:44

கேணை ??


Ramesh Sargam
ஆக 26, 2025 09:13

உங்கள் நம்பிக்கை வீண் போகாது. ஆனால் உங்கள் அமெரிக்கா நம்பிக்கை சந்தேகம்தான்.


Palanisamy Sekar
ஆக 26, 2025 08:40

நாட்டுமக்கள் நலன் கருதி ஜெலின்ஸ்கி போரை நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை பரிசோதிக்க இந்த போரை பயன்படுத்திக்கொள்கின்றார்கள். உங்களது நாட்டு மக்கள் படுகின்ற துயரத்தை கண்டுகொள்ளாமல் உலகமே அன்றைக்கு பார்த்தது உங்களது கோழைத்தனத்தை. ட்ரம்ப் உங்களை கேவலமாக நடத்தியபோதே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நேட்டோ உறுப்பு நாடாக மாறினாலும் இதையேதான் செய்வீர்கள். நீங்கள் கோமாளியாக திரையில் தோன்றினீர்கள். இப்போது ஆட்சி அதிகாரத்திலும் கோமாளியாகவே தெரிகிண்றீர்கள். இந்தியா எப்போதும் சமாதானத்தின் தூதுவனாகவே இருந்துள்ளது இனியும் அப்படிதான் இருக்கும். மோடிஜி புதினிடம் பேசினாலே தீர்வு கண்டுவிடும். ஆனால் நீங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் இப்போது நேட்டோ நாடுகளிடம் வசமாக சிக்கிக்கொண்டீர்கள். அதுதான் உங்களது பலவீனமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை