உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள் 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள் 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்காக உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர். இதனால், ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் ஆவர். இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இது குறித்து குவைத்துக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த சில தினங்களில் 40 இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர். ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குவைத் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் இந்தியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளும் நிலைமையை கவனித்து வருகின்றனர். இந்தியர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள +965-65501587 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

V Venkatachalam
ஆக 14, 2025 15:02

அதென்ன க்ரீட்டா 40 பேர். இந்தியாவுல பார்லிமென்ட்டிற்கு வெளியே சாராயக்கடைகாரன்களுக்காக கோஷம் போட 40 பேர் போயிருக்குங்களே அவிங்கன்னு நினைச்சு பதறிப்போயிட்டேன்.. வடை மிக்ஸர் சாப்பிட்டு விட்டு கோஷம் போடணுமே. அது நின்று போய்விடக் கூடாது.. இல்லையா?


sankar
ஆக 14, 2025 14:16

அங்கேயும் இருநூறொகளா


Anand
ஆக 14, 2025 12:54

திராவிட மாடல் உலகெங்கிலும் கொடிகட்டி பறக்கிறது போல...


கூத்தாடி வாக்கியம்
ஆக 14, 2025 12:37

அடேய் கள்ள சாராயம் குடிசசுட்டு செத்தா தமிழ் நாட்லதாண்டா பணம் குடுப்பாங்க . அங்க போய் தெரியாம குடிச்சிட்டு இப்புடி ஆயிட்டிங்களே....


Ramesh Sargam
ஆக 14, 2025 12:27

குவைத்தில் கூடவா கல்வராயன்மலை கள்ளச்சரக்கு?


Haja Kuthubdeen
ஆக 14, 2025 19:28

அரேபிய நாடுகளில் கட்டிட தொழிலாளர்கள் கீழ்நிலை ஊழியர்களுக்கு நகரத்தை தாண்டி குடியிருப்பு வசதிகள் உண்டு...இங்குதான் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்.


M Ramachandran
ஆக 14, 2025 11:40

அங்கும் திருட்டு கட்சி ஆட்கள் கட்டிங் கொடுத்து கோலோச்சுகிறார்களா?


V K
ஆக 14, 2025 11:13

திராவிட மாடல் ஆட்சி அங்கும் இருக்கு நாளை நம்ம முதல்வர் தமிழ்நாடு குவைத்துக்கு முன் மாதிரியான மாநிலம் என்று ஒரு அறிக்கை


venugopal s
ஆக 14, 2025 11:06

குஜராத்திலும் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் கூட கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளது என்பது குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் சங்கிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!


M. PALANIAPPAN, KERALA
ஆக 14, 2025 10:56

பத்து லட்சம் கிடைக்காது, சிறையில் நிச்சயம் அடைப்பார்கள்


Kasimani Baskaran
ஆக 14, 2025 10:48

கள்ளச்சாராயம் காய்ச்சியது தமிழனா அல்லது திராவிடனா என்பதை சொன்னால் கருத்து எழுத முடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை