உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏமன் கடற்கரையில் படகு கவிழ்ந்து 40 அகதிகள் உயிரிழப்பு

ஏமன் கடற்கரையில் படகு கவிழ்ந்து 40 அகதிகள் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சனா: 260 அகதிகளுடன் சென்ற படகு, ஏமன் கடற்கரையில் கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்ததாக அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 260 பேருடன் சென்ற படகு ஏமன் கடற்கரையில் கவிழ்ந்தது. அதில் 40 பேர் உயிரிழந்தனர். 151 பேரை காணவில்லை. 71 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் எனக்கூறியுள்ளது. இவர்கள் ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளில் நிலவும் குழப்பம், உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் சட்டவிரோதமாக படகு மூலம் செங்கடல் வழியாக அரசு நாடுகள் மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்கு செல்ல முயற்சி செய்கின்றனர். அப்போது பலர் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் படகு கவிழ்ந்த விபத்தில், 1,350 பேர் உயிரிழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ