உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்ராரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் இருந்தது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடந்தது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். அபிஷே க் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அக்ஷர் பட்டேல் ஒரளவு விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.168 ரன்கள் இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் மார்ஷ், மேத்தீவ் சார்ட், நன்கு துவக்கம் தந்தனர்.பின்னர், துபே வீசிய பந்தில் மிச்சல் மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, மேத்தீவ் சாரட் 25 ரன்களில் அக்ஷர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 3, அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி, 48 ரன்களில் வெற்றி பெற்றது. தொடரில் இந்திய அணி, 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 07, 2025 00:56

வாழ்த்துக்கள். இதுபோன்று வொவொரு போட்டியிலும் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


Jagadeesan Vaidyanathan
நவ 06, 2025 20:38

வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்


Rajagopal S
நவ 06, 2025 21:34

சுந்தர் முக்கிய ஆல் ரவுண்டர் ஆக முன்னேறி இருக்கிறார்


Raj
நவ 06, 2025 18:03

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை