மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
4 hour(s) ago | 1
கார்டிப்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் நகரில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 305 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆட்டம் மழையின் காரணமாக தடைபட்டதால், டக்லஸ்லூயிஸ் முறைபடி 34 ஓவருக்கு 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று கோப்பையை வென்றது.
4 hour(s) ago | 1