உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 5 பேர் பரிதாப பலி; 32 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 5 பேர் பரிதாப பலி; 32 பேர் படுகாயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பாகிஸ்தானின் தெற்மேற்கு நகரமான துர்பத்தில், பஸ் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த, மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலூச் விடுதலை சிறுத்தை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மனிதர்கள் என்று அழைப்பதற்கு தகுதியற்றவர்கள்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Radhakrishnan Seetharaman
ஜன 06, 2025 00:43

Karma is a Boomerang


அப்பாவி
ஜன 05, 2025 12:43

72 வேணுமாம்.


Ramesh Sargam
ஜன 05, 2025 11:52

Sow the seed and reap the fruit.


R. SUKUMAR CHEZHIAN
ஜன 05, 2025 11:28

எல்லாம் அவன் செயல். பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா ஆன்மா சாந்தி அடையட்டும்.


தமிழ்வேள்
ஜன 05, 2025 11:19

பாகிஸ்தான் எல்லையில் தலிபான் படைகள் புகுந்து பாக்.ராணுவத்தை உண்டு இல்லை என செய்து கொண்டு இருப்பது பற்றி ஏன் எந்த ஒரு பாரத ஊடகமும் வாயே திறக்கவில்லை?


lana
ஜன 05, 2025 11:03

உலகின் கடைசி மூர்க்கம் இருக்கும் வரையில் இந்த மூர்க்கத்தனமாக செயல் நடக்கும்


uss_ mag
ஜன 05, 2025 09:07

இதற்கும் வந்து முட்டு கொடுப்பார்கள் ?


Kasimani Baskaran
ஜன 05, 2025 08:05

தற்கொலை செய்ய ஆசை என்றால் தனியாக சென்று தற்கொலை செய்து கொள்வதுதானே - ஏன் மற்றவர்களின் உயிரை வாங்கவேண்டும்?


S.L.Narasimman
ஜன 05, 2025 07:42

வடிவேல் சினிமாவில் சொல்வதுபோல செத்து செத்து விளையாடுவோமாங்கிற மாதிரி இந்த தீவிரவாதிகளுக்கு குழந்தைகள் பெண்கள் என்று பார்க்காமல் கொல்லும் காட்டுமிராண்டி குணம் எப்படி வருகிறதோ. பாகிசுதான் தான் ஆதரிக்கும் திவிரவாதத்தை உணர தொடங்கூம்.


சமீபத்திய செய்தி