உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி

காங்கோ ஐ.எஸ்., ஆதரவு குழுவினர் தாக்குதலில் 52 பேர் பலி

கின்ஷாஷா:மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்களானஏ.டி.எப்., எனப்படும் கூட்டணி ஜனநாயக படைக்கும், ருவாண்டா ஆதரவு படைக்கும் இடையே கடுமையான மோதல் நடந்துவருகிறது.இதில் ஏ.டி.எப்., அமைப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதரவு உள்ளது. இவர்கள், வடக்கு கிவு மாகாணத்தில் ஆகஸ்ட் 9 முதல் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில், 52 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காங்கோவில் உள்ள ஐ.நா., அமைதிக்குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ