உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 7 வீரர்கள் டக் அவுட்; வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

7 வீரர்கள் டக் அவுட்; வெறும் 27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

கிங்ஸ்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் 27 ரன்களுக்கு சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமான சாதனை படைத்தது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி, கிங்ஸ்டனில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 2ம் நாள் முடிவில் 99/6 ரன் எடுத்திருந்தது. 3வது நாளில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 121 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக கிரீன் 42 ரன் எடுத்தார். அல்சாரி ஜோசப் 5, சமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினர்.சற்று கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. ஜஸ்டின் கிரேவ்ஸ் (11 ரன்) மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். 7 வீரர்கள் டக் அவுட் ஆகினர். 14.3 ஓவர்களுக்கு, வெறும் 27 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 176 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.

மோசமான சாதனை:

* டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இது 2வது குறைந்தபட்ச ரன்.* ஆஸ்திரேலிய வீரர் போலன்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.* 100வது டெஸ்ட்டில் விளையாடிய ஸ்டார்க், 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAVINDRAN.G
ஜூலை 15, 2025 10:15

வெஸ்ட் இண்டீஸ் எப்படிப்பட்ட கிரிக்கெட் டீம் . நினைக்கவே ரொம்ப வருத்தமா இருக்குங்க. ரிச்சர்ட்ஸ், வால்ஷ், பாட்டர்சன், மார்ஷல், ரிச்சர்ட்சன், டுஜோன், லோகி, கிரீன்இட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் ,அம்ப்ரோஸ், கார்னெர், மைகேல் ஹோல்டரிங், ஆண்டி ராபர்ட்ஸ் , பெஞ்சமின், சிம்மோன்ஸ் இப்படி பழைய பெயர்களை கேட்டாலே அவனவன் அலறுவான். நம்பமுடியவில்லை.


Haja Kuthubdeen
ஜூலை 15, 2025 12:00

கார்ல் ஹூப்பர்...சிவ்நாராயன் சந்தர்பால் பெயரை விட்டு விட்டீர்கள்.எவ்வளவு சிறந்த டீம்...படுபாதாளத்தில் உள்ளது வருத்தம்.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூலை 15, 2025 12:51

நீங்க லாரா பெயரை சொல்லாமல் விட்டு விட்டீர்களே


vijay
ஜூலை 15, 2025 08:40

கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆயிடுச்சு..


சமீபத்திய செய்தி