மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
4 hour(s) ago | 1
துபாய் : 'சவூதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள்' என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக, தற்காலத்தில் நவீன வசதிகள் அதிகரித்து, மக்களின் உடலுழைப்பு வெகுவாக குறைந்து விட்டது. மேலும், எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிக அளவு பயன்படுத்துதல் போன்ற காரணங்களால், மக்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சவுதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் என, தெரியவந்துள்ளது.
உடல் பருமன் காரணமாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்நாட்டு அரசு தயாரித்து வரும் பெரிய நோய்கள் பட்டியலில், உடற்பருமனையும் சேர்த்துள்ளது. உடற்பருமனால் ஏற்படும், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, உயிர் இழப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்துகின்றன.
சவூதி அரேபிய சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவ மையங்களுக்கு பரிசோதனைக்காக வந்தவர்களில் 97 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தொடர்பான பிரச்னைகளுக்காக வந்துள்ளனர். எனவே, அந்நாடு, சுகாதார துறைக்கு, பெரும் தொகை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டில், அந்நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.3 சதவீதத்தை சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியது.
4 hour(s) ago | 1