உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மர் நிலநடுக்கம்; மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்!

மியான்மர் நிலநடுக்கம்; மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காங்: மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மார்ச் 28ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மியான்மரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.நிலநடுக்கத்தால் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 1700க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பல ஆயிரம் பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என, கணித்துள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 31) மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து மியான்மர் முஸ்லிம் அமைப்பை சேர்ந்த துன் கீ கூறியதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட போது 60 மசூதிகள் சேதம் அடைந்தன.அப்போது நாடு முழுவதும் பல்வேறு மசூதிகளில் வெள்ளிக் கிழமை தொழுகை நடந்தது. தொழுகையில் ஈடுபட்டு இருந்த 700 பேர் உயிரிழந்தனர். பழைய காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான மசூதிகள் மிகவும் சேதம் அடைந்தன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mediagoons
மார் 31, 2025 19:55

இந்தியாவின் இந்து மதவாத அரசின் பிரம்ம சதியால் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு, சாதனம் கொடுக்க மட்டும்தான் முடிந்தது


Keshavan.J
மார் 31, 2025 21:33

தம்பி எந்த கடையில் கஞ்சா வணகிரிக. பூகம்பமே இந்தியா பிரம்ம சதியால் உண்டாக்கினார்களா. உங்க மனசு புரா விஷம் இருக்கிறது. நீங்க கும்புடுகிற சாமி கூட உங்கள் மன்னிக்காது. இந்தியா தான் முதன் முதலில் உதவி அனுப்பியது.


M Ramachandran
மார் 31, 2025 19:19

இந்த நில நடுக்கம் ஜனதொகை அதிகம் உள்ள ஏழை நாடுகளில் நிகழும் போது ஜனத்தொகை நெருக்கத்தின் காரண மாக உயிர் இழப்பட்டு அதிக மாகிறது.


தாமரை மலர்கிறது
மார் 31, 2025 19:05

இயற்கை மதவெறியை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 31, 2025 17:49

அவனை மீறி அணுவும் அசையாது ........


Rasheel
மார் 31, 2025 15:49

இயற்கை கற்று கொடுக்கும் பாடம். ஓர் இறைவனே மத வெறியை ஏற்பதில்லை.


பெரிய ராசு
மார் 31, 2025 15:09

அமைதியாக இருக்கின்ற புத்தரே கோபப்பட்டுறார் போல , ஆழ்ந்த அனுதாபங்கள்


m.arunachalam
மார் 31, 2025 14:40

இயற்கையின் பாடம். கற்று தெளிவதற்கான எச்சரிக்கை. மதம், ஜாதி, கேளிக்கைகளை சரியான விதத்தில் கையாள வேண்டும் .


R S BALA
மார் 31, 2025 14:22

அட கடவுளே இன்னும் நிலநடுக்கம் ஓய்ந்தபாடில்லையா.. பருவகாலங்களில் மழை இன்னும் தொடரும் வெயில் காலங்களில் வெப்பம் சில நாட்கள் அதிகரிக்கும் என்பது போல இந்த நிலநடுக்கங்கள் தொடருதல் மிக கொடுமையானது மனித வாழ்வினை தரைமட்டமாக்கி அர்த்தமற்றதாகி விடுகிறது இது போன்ற கொடூர நிகழ்வுகள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை