உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வானூட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை வெளியீடு

வானூட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட் வில்லா; வானூட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பசிபிக் பெருங்கடல் தெற்கு பகுதியில் உள்ளது வானூட்டு தீவு. இங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கட்டிடங்கள் குலுங்க, பீதி அடைந்த மக்கள் குடியிருப்பு வளாகங்களை விட்டு, ஓடி வந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறி உள்ளது. போர்ட் வில்லாவுக்கு மேற்கில் 30 கி.மீ., தொலைவில் 43 கி.மீ., ஆழத்தில் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, வானூட்டு தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி