உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் 700 அடி பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

நேபாளத்தில் 700 அடி பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் 700 அடி பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கிமீ தொலைவில் உள்ள பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்த இடத்திலேயே ஏழு பேர் இறந்தனர். பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இந்த விபத்து இன்று நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது.நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை, நள்ளிரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
அக் 25, 2025 16:37

ஜீப்பில் அனுமதிக்க பட்ட நபர்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஏற்றி இருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. அதிக எடை, வாகன ஓட்டியின் கவன சிதறல் வாகனத்தை எளிதாக நிலை தடுமாறு செய்யும். மொத்தத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.


keerthi
அக் 25, 2025 12:18

ஆழ்ந்த இரங்கல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை